நேற்று ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ பிளிப்கார்ட் மற்றும் MI .com வெப்சைட்டில் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த சில நொடியிலே அத்தனை போன்களையும் விற்று தீர்த்தது என்று MD Manu Kumar Jain ட்விட்டர் மூலம் தெரிவித்தார் அதனை தொடர்ந்து மேலும் பலர் இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர் பிளாஷ் சேல் என்ற காரணத்தால் நொடி பொழுதில் அத்தனை ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் MI .com யின் இரு தளங்களில் விற்பனை முடிவடைந்தது.
மேலும் இதனை தொடர்ந்து இதன் அடுத்த சேல் மார்ச் 20 அன்று பகல் 12 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் சுமார் 2 லட்ச யூனிட் உடனடியாக விற்பனை ஆகியது என்று கூறப்படுகிறது. மேலும் Redmi Note 7 Pro மிக சிறந்த மென்பொருள் வழங்கப்பட்டதால், மக்களுக்கு இது மிகவும் விருப்பமுள்ளதாக இருக்கிறது. இதனை தொடர்ந்து Redmi Note 7 Pro ப்ரீபெய்ட் ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மேலும் இதன் Redmi Note 7 சாதாரண பிளாஷ் சேலில் ஸ்டர்டாக விற்பனை செய்யப்படும்
Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது அறிமுக சலுகையில் கீழ் ஏர்டெல் பயனர்கள் 1120GB 4G டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்கள் வழங்குகிறது.
ரெட்மி நோட் 7 சாதனத்தை பற்றி பேசினால், இந்த சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன் மற்றொரு வகை 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.