digit zero1 awards

Redmi 6 Pro இன்டர்நெட்டில் தகவல் வெளியானது..!

Redmi 6 Pro  இன்டர்நெட்டில் தகவல் வெளியானது..!
HIGHLIGHTS

சமீபத்தில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் மற்றும் சான்றளிக்கும் வெப்சைட்களில் லீக் ஆகியுள்ளது.

சியோமி நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் அடுத்த ஸ்மார்ட்போனாக ரெட்மி 6 சீரிஸ் இருக்கலாம். சமீபத்தில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் மற்றும் சான்றளிக்கும் வெப்சைட்களில் லீக் ஆகியுள்ளது. 

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அமெரிக்காவிலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதற்கட்டமாக ரெட்மி 6 சீரிஸ் அமெரிக்க சந்தையில் வெளியிடப்படலாம். 

ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம்+32ஜிபி மெமரி, 4ஜிபி ரேம்+32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம்+64ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரெட்மி 6 ப்ரோ மாடல் கோல்டு, பிளாக், பின்க், புளு மற்றும் ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 6 ப்ரோ மாடலில் 5.45 இன்ச் நாட்ச் டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080×2280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கலாம். ரெட்மி 6 ப்ரோ மாடலில் MIUI 10 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 4000 Mah,. திறன் கொண்ட பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..

போட்டோக்கள் எடுக்க 12 MP டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி 6 ப்ரோ வெளியீடு குறித்து இதுவரை சியோமியிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்தியாவில் ரெட்மி நோட் 6 போன்கள் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் சியோமியின் துணை பிரான்டு போகோ சர்வதேச சந்தையில் அறிமுகமானது. அந்த வகையில் போகோ F 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. மூன்று வித இன்டெர்னல் மெமரி மற்றும் ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கும் போகோ F1  மாடலின் பேஸ் வேரியன்ட் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரியும், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 

இவற்றின் விலை முறையே ரூ.20,999, ரூ.23,999 மற்றும் ரூ.28,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 8ஜிபி ரேம், 256 ஜிபி வேரியன்ட் ஆர்மர்டு எடிஷன் மாடலும் விற்பனை செய்யப்பட இருகிறது. இதன் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய போகோ F 1 மாடல் ஆகஸ்டு 29-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo