Xiaomi Redmi 6 Pro information revealed before official launch= Xiaomi Redmi 6 Pro அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்பே இந்த சாதனத்தின் பத்தி தகவல் லீக் ஆகியுள்ளது.முந்தைய தகவல்களின்படி, சாதனத்தில் நோட்ச் டிஸ்பிளே இருக்கும். Redmi 6 Pro இன் TENAA லிஸ்ட் சாதனம் அனைத்து குறிப்புகள் வெளிப்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளை இந்திய டிப்ஸ்டர் அறிமுகப்படுத்துகிறார். மேலும், அவர் Mi Pad 4 மற்றும் Xiaomi Mi 6X தொடர்பான சில தகவலை பகிர்ந்துள்ளார்.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார் வழங்கப்படுகிறது. இதனால் ரெட்மி 6 போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் ஏஐ சார்ந்த போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க முடியும்.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவது சமீபத்திய டீசரில் தெரியவந்தது. ரோஸ் கோல்டு, கோல்டு, புளு, பிளாக் மற்றும் ரெட் என ஐந்து நிறங்களில் கிடைக்கும் என்றும் ஸ்மார்ட்போனின் மேல்புறம் இன்ஃப்ராரெட் சென்சார் வழங்கப்படுகிறது.
பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மெமரி அம்சங்களை பொருத்த வரை ரெட்மி 6 போன்றே 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இருவித மாடல்களில் வெளியிடப்படுகிறது.
சியோமி ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 5.84 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், 1.25um, PDAF, f/2.2
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 சென்சார், 1.12um, f/2.2
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,520) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை மற்றும் Mi பேட் 4 சாதனத்தின் இதர விவரங்கள் அறிமுக தினத்தன்று தெரியவரும்.