digit zero1 awards

Xiaomi யின் புதிய Pocophone விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்…!

Xiaomi யின் புதிய Pocophone  விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்…!
HIGHLIGHTS

வதந்தியின் படி இந்த சாதனத்தில் ஸ்னாப்ட்ரகன் 845 SoC மற்றும் 4,000mAh பேட்டரி கொண்டிருக்கும்

Xiaomi இப்பொழுது Pocophone  பெயரில் புதிய சீரிஸ் அறிமுகப்படுத்த தயார் செய்து கொண்டு இருக்கிறது, சில நாட்களாகவே  இந்த சீரிஸ் பற்றி நிறைய லீக் வருகிறது,ஆனால் இப்பொழுது  இந்த விஷத்தை பற்றிய  எந்த தகவலும் இல்லை அதாவது எந்த சந்தையில்  இந்த சீரிஸ் அறிமுகமாகும் என தெரியவில்லை, ஆனால்  இப்பொழுது Xiaomi இந்தியா  ப்ரொடக்ட்  மேனேஜர் Jai Mani ட்விட்டரில் தெரிவித்துள்ளது, இந்த சாதனத்தில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

God'speed' @JaiMani and the @IndiaPOCO team! Now this is going to be exciting. https://t.co/3YFsf7ySHX

— Mi India (@XiaomiIndia) 9 August 2018

சியோமி நிறுவனத்தின் போகோ பிரான்டு இந்தியாவில் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போன் முதலில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், சியோமி இந்தியாவின் ஜெய் மணி, புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒப்போ நிறுவனத்தின் ரியல்மி சியோமிக்கு போட்டியாக துவங்கப்பட்டுள்ள நிலையில், சியோமியின் புதிய போகோ துவங்கப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் போகோபோன் என டீஸ் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் போகோ என டீஸ் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை போகோபோன் எஃப்1 மாடலில் 6.0 இன்ச் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், லிக்விட் கூலிங் வசதி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் பிரைமரி கேமரா, ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பின்புறைம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

சியோமி Pocophone  எஃப்1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 

– 5.99 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இஷ வைபை, ப்லூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போனின் டீசர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo