சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்றே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.9 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, 1.3மில்லிமீட்டர் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. Xiaomi Mi Max 3 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் 6.9-இன்ச் FHD+ டிஸ்பிளே ஸ்னாப்ட்ரகன் 636, 6GB ரேம் மற்றும் AI அம்சம் கொண்ட டூயல் பின் கேமரா உடன் மற்றும் இதனுடன் 5,500mAh பேட்டரி கொண்டுள்ளது
இத்துடன் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI, 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் PD ஃபோக்கஸ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்பம், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் கைரேகை சென்சார், 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி Mi மேக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:
– 6.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், டூயல் PD ஃபோக்கஸ், எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 5500 MAH பேட்டரி
– க்விக் சார்ஜ் 3.0
சியோமி Mi மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மெட்டோரிட் பிளாக், டிரீம் கோல்டு மற்றும் டார்க் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. Mi மேக்ஸ் 3 விலை சீனாவில் 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.17,320) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,375) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.