digit zero1 awards

Xiaomi Mi A2, Xiaomi Mi A2 Lite ஸ்மார்ட்போன் இரட்டை கேமராவுடன் அறிமுகமானது..!

Xiaomi Mi A2, Xiaomi Mi A2 Lite ஸ்மார்ட்போன் இரட்டை கேமராவுடன் அறிமுகமானது..!
HIGHLIGHTS

சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது

Xiaomi  ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம்  Mi A2  மற்றும் Mi A2 Lite ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தியது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் வர்ட்டிகள் இரட்டை அமைப்புடன் அறிமுகமானது இதை தவிர இதில் AI  கேமரா அம்சம் கொண்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டோக் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது, இதை தவிர இது கூகுள் பிளாட்பார்மிலும்  இயங்குகிறது, 

இந்த ஸ்மார்ட்போனை கடந்த வருடம் Xiaomi Mi A1 போலவே இந்த ஸ்மார்ட்போன்  அறிமுமாகியுள்ளது நாம்  ஏற்கனவே பாத்தது போல Xiaomi Mi A1  ஸ்மார்ட்போனில் Xiaomi Mi 5X  யின் முதல் ஆண்ட்ராய்டு வகையில் இருந்தது  அது போல  Xiaomi Mi A2 வின்  Xiaomi Mi 6X ஆண்ட்ராய்டு  வகையில் அறிமுகப்படுத்தியது.

சியோமி நிறுவனத்தின் Mi A2 சீரிஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் அறிமுகமான Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலாக அமைந்திருக்கிறது. 

Mi A2 ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 12 எம்பி பிரைமரி கேமரா,  f/1.75 அப்ரேச்சர், சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்பி சோனி IMX376 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஏ.ஐ. பியூடிஃபிகேஷன் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இல் 1 – 2.0um பிக்சல்கள்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 4 இல் 1 – 2.0um பிக்சல்கள், சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.20,065), 64 ஜிபி விலை 279 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,485) என்றும் டாப் என்ட் 6ஜிபி ரேம், 128 ஜிபி வேரியன்ட் விலை 349 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.28,130) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சியோமி Mi A2 லைட் சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5KE8 சென்சார், f/2.2, 1.12um பிக்சல்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி Mi A2 லைட் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை 179 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.14,435), 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் 229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18,460) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi A2 மற்றும் Mi A2 லைட் ஸ்மார்ட்போன்கள் ஸ்பெயினில் ஆகஸ்டு 10-ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் ஜூலை 27-ம் தேதி, இத்தாலியில் ஆகஸ்டு 8-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா உள்பட உலகின் 40 நாடுகளில் விற்பனை துவங்கும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo