Xiaomi வழங்கும் ஒரு புதிய சர்ப்ரைஸ் ஸ்மார்ட்போன்

Updated on 13-Apr-2018
HIGHLIGHTS

சியோமி நிறுவனம் ஏப்ரல் 25-இல் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சியோமி நிறுவன புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 25-ம் தேதி இதற்கான அறிமுக நிகழ்வு நடைபெற இருப்பதாக அந்நிறுவன அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதம் நடைபெற இருக்கும் விழாவில் சியோமி நிறுவனம் Mi A1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான Mi A2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்த Mi 5X ஸ்மார்ட்போன் இந்தியாவில் Mi A1 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிமுகமாகும் Mi 6X ஸ்மார்ட்போன் இந்தியாவில் Mi A2 என்ற பிரான்டிங் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெய்போவில் சியோமி Mi பக்கத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஏப்ரல் 25-ம் தேதி துவங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று சியோமி நிறுவன மூத்த துணை தலைவர் வாங் சியாங் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு வுஹான் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சியோமி Mi A2 அல்லது Mi 6X ஸ்மார்ட்போன் TENAA எனும் வலைத்தளத்தில் கசிந்திருந்தது. இந்த தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் வெளியாகியிருந்தது. அதன்படி ஸ்மார்ட்போனில் 5.99 இனஅச் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2910 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.

பல்வேறு அம்சங்களில் புதிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலை நினைவூட்டுகிறது. இதன் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

இதேபோன்று வெளயாகி இருந்த தகவல்களில் Mi 6X ஸ்மார்ட்போனில் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் டூயல் கேமரா செட்டப் 20எம்பி மற்றும் 8 எம்பி பிரைமரி கேமரா, முன்பக்கம் 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :