கடந்த சில நாட்களாக சியோமி லீக்ஸ் பற்றி பார்த்து வந்தோம் அதனை தொடர்ந்து Xiaomi இன்று அதன் Redmi S2ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது நிறுவனத்தின் இந்த Redmi S2 வில் ஸ்னாப்ட்ரகன் 25 SoC உடன் வருகிறது, ஆனால் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை இதன் விலை ரேஞ் 10,000ரூபாயில் ரேஞ்சில் இருக்கும் என தெரிகிறது
சியோமி ரெட்மி எஸ்2 ஸ்பெசிபிகேஷன் :
– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி
5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இத்துடன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9 இயங்குகிறது, 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
விலை
புதிய சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் கிரே, ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவி்ல் 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.Rs 10,600 என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,700)) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.