Xiaomi 13T Series ஸ்மார்ட்போன் 120W சார்ஜிங் உடன் அறிமுகம் டாப் 5 பாருங்க

Xiaomi 13T Series ஸ்மார்ட்போன் 120W சார்ஜிங் உடன் அறிமுகம் டாப் 5 பாருங்க

Xiaomi சமீபத்தில் சீனாவில் தனது Redmi Note 13 சீரிஸ் அறிமுகப்படுத்தியதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Xiaomi 13T சீரிஸை நிறுவனம் பெர்லினில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வின் போது உலக சந்தையில் அறிமுகப்படுத்திய போது இந்த ஸ்மார்ட்போன்களுக்கான மோகம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த புதிய ப்ளக்ஷிப் வரிசையில் 13T மற்றும் 13T ப்ரோ மாடல்கள் உள்ளன. இந்த போன்கள் லைகா ஆப்டிக்ஸ் மற்றும் 120W வரை பாஸ்ட் சார்ஜ் செய்யும் பவர் கொண்டவை. இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.

Xiaomi !3T
#image_title

Xiaomi 13T Pro, Xiaomi 13T சிறப்பம்சம்

டிஸ்ப்ளே

நிறுவனத்தின் படி Xiaomi 13T மற்றும் 13T Pro ஒரு 6.67-இன்ச் கொண்ட OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இது 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் இதன் பீக் ப்ரைட்னஸ் 2,600 nits இருக்கிறது

ப்ரோசெசர்

இந்த 13T போனில் மீடியாடேக் டிமான்சிட்டி 8200 அல்ட்ரா சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே 13T Pro போனில் Dimensity 9200+ சிப்செட் ப்ரோசெச்சர் இந்த போனின் பர்போமசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் Android 13-அடிபடையின் கீழ் MIUI 14 யில் வேலை செய்கிறது இதை தவிர இதில் OS அப்டேட்ஸ் மற்றும் செக்யுரிட்டி அப்டேட்க்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

Xiaomi 13T
#image_title

கேமரா

இந்த Xiaomi 13T series இரு சீர்சும் 50MP OIS மெயின், 12MP அல்ட்ராவைடு மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் பின்புற பேனலில் உள்ளது. போனின் முன்பக்கத்தில் 20MP செல்ஃபி ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக, இன்-ஸ்கிரீன் பிங்கர்ப்ரின்ட் ரீடர் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றிற்கான ஆதரவை அவர்கள் பெற்றுள்ளனர்.

பேட்டரி

பேட்டரி பற்றி பேசுகையில் xiaomi 13T யில் 5000mAh பேட்டரியுடன் 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அதுவே 13T Pro யில் அதே 5000mAh பேட்டரியுடன் இதில் மாற்றமாக 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

#image_title

Xiaomi 13T Pro, Xiaomi 13T விலை தகவல்.

Xiaomi 13T ஸ்மார்ட்போனின் விலை EUR 649 (தோராயமாக ரூ. 58000) யில் தொடங்குகிறது மற்றும் இது இரண்டு ரேம் வகைகளில் 8GB/12GB மற்றும் ஒரு ஸ்டோரேஜ் கட்டமைப்பு 256GB யில் வருகிறது. மறுபுறம், 13T ப்ரோவின் விலை 799 EUR யில் தொடங்குகிறது. இந்த மாடல் 12GB + 256GB, 12GB + 512GB மற்றும் 16GB + 1TB ஆகிய மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. இரண்டு போன்களும் Black, Meadow Green மற்றும் Alpine Blue நிறத்தில் வருகின்றன.

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின் பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo