Xiaomi யின் மடிக்ககூடிய போனின் புதிய வீடியோ டீசர் வந்துள்ளது

Updated on 29-Mar-2019
HIGHLIGHTS

டிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன

சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை மட்டும் புதிய வீடியோ உறுதிப்படுத்தியுள்ளது.

சியோமியின் அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில்  வெளியாகி இருக்கும் வீடியோவில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் போர்டிரெயிட் மோட் மற்றும் மடிக்கப்படாத நிலையில் ஒருவர் பயன்படுத்துவதும், ஸ்மார்ட்போனினை இருபுறங்களிலும் மடித்து அதனை நூடுல்ஸ் பெட்டியின் மேல் வைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 

முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சியோமி இதே ஸ்மார்ட்போனின் சிறிய வீடியோவினை வெளியிட்டது. இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக இந்த ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றி சியோமி சார்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

#xiaomi
Xiaomi Mi Fold with double folding screen. pic.twitter.com/vvYaf6rLOL

https://twitter.com/xiaomishka/status/1110878077146615809?ref_src=twsrc%5Etfw

இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் மென்பொருள் சீராக இயங்கவில்லை. ஸ்மார்ட்போன் மடிக்கப்படும் போது யு.ஐ. புதிய திரையின் அளவிற்கு மாற சிறிது நேரம் எடுத்துக் கொள்வது தெளிவாக தெரிகிறது. சந்தையில் அறிமுகமாகும் போது இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

சியோமி தவிர சாம்சங், ஹூவாய் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :