Xiaomi Mix Fold 4 அறிமுக தகவல் உடன் அம்சமும் லீக்

Xiaomi Mix Fold 4 அறிமுக தகவல் உடன் அம்சமும் லீக்
HIGHLIGHTS

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomiயின் Mix Fold 4 இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்

Xiaomi யின் சீனா மெசேஜிங் பளாட்பார்ம் Weibo யின் ஒரு போஸ்ட்டில் கூறப்பட்டுள்ளது

நிறுவனத்தின் முதல் கிளாம்ஷெல் போல்டப்பில் ஸ்மார்ட்போனான Xiaomi Mix Flip உடன் கொண்டு வரப்படலாம்.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomiயின் Mix Fold 4 இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். இது கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிக்ஸ் ஃபோல்ட் 3க்கு மாற்றாக இருக்கும். இந்த புத்தக பாணி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் முதல் கிளாம்ஷெல் போல்டப்பில் ஸ்மார்ட்போனான Xiaomi Mix Flip உடன் கொண்டு வரப்படலாம்.

Xiaomi Mix Fold 4, Mix Flip எப்பொழுது அறிமுகமாகும்

Xiaomi யின் சீனா மெசேஜிங் பளாட்பார்ம் Weibo யின் ஒரு போஸ்ட்டில் கூறப்பட்டுள்ளது Xiaomi Mix Fold 4 மற்றும் Mix Flip யின் பேஜிங் Changping யின் நிறுவனத்தின் ஸ்மார்ட் பேக்டரி யில் செய்யப்பட்டது. இந்த பேக்டரியின் யின் கெப்பாசிட்டி ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட உள்ளன. சமீபத்தில், டிப்ஸ்டர் இவான் பிளாஸ் (@evleaks) சோசியல் மீடியா ஊடக தளமான X இல் ஒரு இடுகையில் Mix Fold 4 இன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களை லீக் செய்யப்பட்டுள்ளது . இதில், நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில், ஒரு பெரிய கேமரா தீவு தெரியும். இதில் நான்கு Coca-Cola பிராண்டட் கேமராக்கள் மற்றும் LED ஃபிளாஷ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Leica Summilux லென்ஸுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா வழங்கப்படலாம். இதன் ப்ரோசெசராக Snapdragon 8 Gen 3 இருக்கலாம். சியோமியின் மிக்ஸ் ஃபோல்ட் 3 யில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 இருந்தது.

Xiaomi Mix Fold 4, Mix Flip அம்சம்

Xiaomi Mix Fold 4 யில் முன்னதாக Samsung Galaxy Z Fold 6 போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 SoC ஆல் இயக்கப்படலாம் மற்றும் லைகா சம்மிலக்ஸ் ஆதரவு 50 மெகாபிக்சல் பிரதான கேமரா சென்சார் கொண்டுள்ளது. இந்த போனானது வாட்டர் ரெஸிஸ்டண்ட்டிற்க்காக IPX8-ரேட்டிங்கை பில்ட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியை ஃபோன்கொண்டிருக்கலாம்.

இதற்கிடையில், Xiaomi Mix Flip ஆனது Mix Fold 4 போன்ற சிப்செட்டைப் பெற வாய்ப்புள்ளது. இது 1.5K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே மற்றும் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,900mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். போட்டோகிராபிக்கு , 50 மெகாபிக்சல் OV50E மெயின் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 60-மெகாபிக்சல் OV60A இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டு செல்லும் வகையில் கிளாம்ஷெல் போல்டப்பில் போனானது . இந்த போனில் முன் கேமரா 32 மெகாபிக்சல் சென்சாராக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo