சியோமி நிறுவனத்தின் புதிய Mi ஸ்மார்ட்போன் இம்மாத வாக்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சியோமி Mi 7 ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. புதிய Mi ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய தகவல் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியிடம் இருந்து கசிந்துள்ளது.
சியோமி தலைமை செயல் அதிகாரியான லெஸ் ஜூன் வெளியிட்டிருக்கும் தகவல்களில் Mi 7 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிவித்திருக்கிறார். வெய்போ வலைத்தளத்தின் உரையாடலில் இத்தகவலை அவர் தெரிவித்திருந்தார்.
இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தவிர மற்ற அம்சங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை. 2017-இல் சியோமி மற்றும் சாம்சங் டிஸ்ப்ளே 6.01 இன்ச் OLED பேனல்களுக்கு இணைந்தன. கீக்பென்ச் தகவல்களின் படி Mi 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சியோமி டிப்பர் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம்ஸ ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்கள் ஒருபுறம் இருந்தாலும் புதிய ஸ்மார்ட்போன் எவ்வாறு அழைக்கப்படும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. முந்தைய Mi 5எஸ் மற்றும் Mi 5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களை ஜெமினி மற்றும் கேப்ரிகான் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருந்தது.