Snapdragon 8 Elite ப்ரோசெருடன் அறிமுகமானது Xiaomi 15 சீரிஸ் போன் அறிமுக சலுகையாக ரூ,10,000 கேஷ்பேக்

Updated on 11-Mar-2025

சீனாவின் அறிமுகம் செய்த , Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Ultra ஒரு வழியாக இந்தியாவிற்கும் வந்தாச்சு மேலும் இந்த போனில் பல அப்க்ரேட் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் மிக சிறந்த கேமரா,டிசைன், டிசைன் மற்றும் டிஸ்ப்ளே போன்ற பல அம்சங்கள் கொண்டிருக்கிறது மேலும் இந்த போன் Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Ultra,மிக சிறந்த வெற்றியின் காரணமாக அறிமுகம் செய்தது இந்த போனின் விலை மற்றும் இதில் இருக்கும் சுவாரசிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Xiaomi 15 Ultra, 15 இந்திய விலை மற்றும் ஆபர் தகவல்.

Xiaomi 15 இந்த போனை இந்தியாவில் ரூ,64,999 யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதுவே Xiaomi 15 Ultra விலை ரூ,1,09,999 ஆக வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த இரு போனும் சிங்கிள் வேரியண்டில் வருகிறது

கூடுதலாக இதில் Xiaomi 15 Ultra போடோக்ரபி கிட் லெஜென்ட் எடிசன் விலை ரூ,11,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

மார்ச் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. Xiaomi 15-ஐ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,999 மதிப்புள்ள Xiaomi Care திட்டம் இலவசமாக வழங்கப்படும். இதற்கிடையில், Xiaomi 15 Ultra-வை முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் Photography Kit Legend Edition கிடைக்கும்.

ICICI பேங்க் கஸ்டமர்கள் சியோமி 15 அல்ட்ராவில் ரூ.10,000 கேஷ்பேக்கையும், சியோமி 15 இல் ரூ.5,000 கேஷ்பேக்கையும் பெறலாம்.

Xiaomi 15 Ultra போனின் டாப் அம்சங்கள்.

  • டிஸ்ப்ளே : இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.73-இன்ச் AMOLED மைக்ரோ-கர்வ்ட் 2K டிஸ்ப்ளே, 120Hz ரெப்ராஸ் ரேட் , 3,200 nits ஹை ப்ரைட்னாஸ், HDR 10+, டால்பி விஷன் சப்போர்ட் , Xiaomi செராமிக் கிளாஸ் பாதுகாப்பு 2.0. ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
  • ப்ரோசெசர் : Xiaomi 15 போனில் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது
  • கேமராக்கள்: 200MP லைக்கா பெரிஸ்கோப் லென்ஸ், 50MP லைக்கா பிரைமரி லென்ஸ், OIS உடன் கூடிய 50MP லைக்கா டெலிஃபோட்டோ லென்ஸ், 50MP லைக்கா அல்ட்ரா-வைட் கேமரா; 32MP முன் கேமரா.
  • சாப்ட்வேர் : ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்.
  • பேட்டரி மற்றும் சார்ஜிங்: 5,410mAh பேட்டரி, 90W வயர்டு சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது .
  • மற்ற அம்சங்கள்: IP68 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் , டால்பி அட்மோஸ் ஸ்டீரியோ இரட்டை ஸ்பீக்கர்கள், NFC, 5G, அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.

Xiaomi 15 டாப் சிறப்பம்சம்.

  • டிஸ்ப்ளே : Xiaomi 15 யின் இந்த போனில் 6.36-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே , 120Hz ரெப்ராஸ் ரேட் , 3,200 nits ஹை ப்ரைட்னஸ் , HDR10, HDR10+, டால்பி விஷன் சப்போர்ட் வழங்குகிறது.
  • ப்ரோசெசர் : இந்த போனில் ப்ரோசெசருக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்.
  • கேமரா: இந்த போனின் கேமரா 50MP Lighthunter 900 ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைட் கேமரா, 50MP 3.2x டெலிஃபோட்டோ லென்ஸ்; 32MP ஆம்னிவிஷன் OV32B40 முன்பக்க கேமரா.
  • பேட்டரி மற்றும் சார்ஜிங்: இப்பொழுது பேட்டரியை பற்றி பேசுகையில் இதில் 5,240mAh பேட்டரி, 90W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது .
  • சாப்ட்வேர் : ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0 வழங்கப்படுகிறது .
  • மற்ற அம்சங்கள்: டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 ரேட்டிங் , அல்ட்ராசோனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார், NFC, டால்பி அட்மாஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது .டைமென்சன் : 8.08mm, 191 கிராம். இடயாகும்

இதையும் படிங்க Nothing யின் புதிய போனின் முதல் சேல் பேங்க் ஆபர் மூலம் வெறும் ரூ,19,999 யில் வாங்க ஜாக் பாட் ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :