Xiaomi பிப்ரவரி 22 அன்று ஒரு வெளியீட்டு நிகழ்வில் சீன சந்தையில் XXiaomi 14 Ultra அறிமுகப்படுத்தப் போகிறது. சமீபத்தில், ஒரு லீக் உள்நாட்டு சந்தைக்கான 14 அல்ட்ராவின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளை வெளிப்படுத்தியது. இப்போது 14 அல்ட்ராவின் கலர் வகைகளும் வெளியாகியுள்ளன. Xiaomi 14 Ultra பற்றி இங்கு விரிவாக கூறுகிறோம்.
tipster ஷேர் செய்த போட்டோ மூலம் தெரிய வந்தது என்னவென்றால், Xiaomi 14 Ultra ஸ்மார்ட்போனில் லெதர் கிளாஸ் மற்றும் டைடானியம் ஒப்சனுடன் வருகிறது. லீக் 14 அல்ட்ராவின் 16GB+1TB வேரியண்டிர்க்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, அந்த வெர்ஷனின் வெள்ளை வேரியன்ட் லெதர் பேக் கொண்டிருக்கும், அதே சமயம் நீல நிற வேரியன்ட் கிளாஸ் பின்புறம் இருக்கும்.
முந்தைய லீகின்படி Xiaomi 14 அல்ட்ரா 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற குறைந்த வகைகளிலும் வரும். இந்த வகைகளின் விலை குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், 16GB + 1TB மாறுபாட்டின் விலை 7299 யுவான் (தோராயமாக ரூ. 84,308) மற்றும் அதன் டைட்டானியம் வகையின் விலை 7,779 யுவான் (தோராயமாக ரூ. 90,120) என மதிப்பிடப்பட்டுள்ளது.
லீக்கின் படி, Xiaomi 14 Ultra ஆனது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 6.73-இன்ச் OLED 2K டிஸ்ப்ளே கொண்டிருக்கும். அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இந்த போனில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும். இந்த போனில் LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜ் வழங்கப்படும். போனில் 5,300mAh பேட்டரி இருக்கும், இது 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் முன்பே ஏற்றப்படும்.
இதையும் படிங்க: இந்த 12 ஆப் உங்களின் மொபைலில் இருந்தா உடனே டெல்ட் பண்ணுங்க
கேமரா செட்டப் பற்றி பற்றி பஐகையில் இந்த ஃபோனின் பின்புறம் LYT-900 50 மெகாபிக்சல் முதன்மைக் கேமராவுடன் OIS ஆதரவுடன் f/1.63 முதல் f/4.0 வரை மாறக்கூடிய அப்ரட்ஜர் IMX858 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 3.2x ஆப்டிகல் ஜூம் மற்றும் IMX858 50 மெகாபிக்சல் டெலி சப்போர்ட். 5x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS ஆதரவுடன் IMX858 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா. இதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கலாம்.