Xiaomi 14 series அறிமுக தேதி அறிவிப்பு எப்போ தெரியுமா

Updated on 13-Oct-2023
HIGHLIGHTS

Xiaomi 14 சீரிஸ் பற்றி சில காலமாக லீக்கள் மற்றும் வதந்திகள் உள்ளன

சியோமி 14, சியோமி 14 ப்ரோ மற்றும் சியோமி 14 அல்ட்ரா ஆகிய மூன்று மாடல்கள் இருக்கும்

Xiaomi 14 சீரிஸ் அக்டோபர் 27 அன்று வெளியிடப் போவதாகக் கூறுகின்றனர்.

Xiaomi 14 சீரிஸ் பற்றி சில காலமாக லீக்கள் மற்றும் வதந்திகள் உள்ளன. இந்தத் சீரிஸ் சியோமி 14, சியோமி 14 ப்ரோ மற்றும் சியோமி 14 அல்ட்ரா ஆகிய மூன்று மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வதந்திகளின்படி, இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் உடன் வரும் முதல் போன்களாக இருக்கும். எனவே, நவம்பரில் இவை அறிமுகம் செய்யப்படும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

Qualcomm யின் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் மொபைல் சிஸ்டம்-ஆன்-சிப் (SoC) இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது என்பதே இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். இருப்பினும், இப்போது ஒரு புதிய அறிக்கையின்படி சியோமி 14 மற்றும் 14 Pro இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

xiaomi 14 series camera

எப்பொழுது அறிமுகமாகும் Xiaomi 14 Series?

Gizmochina அறிக்கையின்படி, வெய்போவில் உள்ள பல பதிவர்கள் சியோமி 14 சீரிஸ் அக்டோபர் 27 அன்று வெளியிடப் போவதாகக் கூறுகின்றனர்.

இந்த செய்தி ITHome யின்முதல் அறிக்கையாகும். இந்தத் தகவல் உண்மையாகிவிட்டால், சியோமியின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்கள் Snapdragon Summit 2023க்கு அடுத்த நாள் வழங்கப்படும். தெரியாதவர்களுக்காக, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்பிற்கான குவால்காம் மாநாடு அக்டோபர் 24 முதல் 26 வரை Hawaii யில் நடைபெற்றது.

Xiaomi 14 Series?

சியோமி 14 சீரிஸ்மூன்று மாடல்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் வெண்ணிலா மற்றும் ப்ரோ மாடல்கள் மட்டுமே இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் அல்ட்ரா அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

iPhone 15 போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் சியோமி14 Pro

சியோமி 14 மற்றும் 14 ப்ரோவில் லைக்கா-டியூன் செய்யப்பட்ட கேமராக்கள் வழங்கப்படலாம், அவை மூன்று வெவ்வேறு குவிய நீளம் கொண்டதாக இருக்கும். ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸைப் போலவே, சியோமி 14 ப்ரோவும் டைட்டானியம் சட்டகம் மற்றும் செயற்கைக்கோள் இணைப்புடன் வரலாம்.

மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MIUI 15 உடன் வரும் முதல் போனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி யின் மொபைல் சாப்ட்வேர் இந்த புதிய அப்டேட் இந்த போன்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Jio யின் JioBharat B1 ரூ,1299 யில் அறிமுகம் UPI அம்சம் இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :