Xiaomi 14 Series:அடுத்த ஆட்டதுக்கு ரெடியாகும் Xiaomi ஒன்னு இல்ல 2 போன் கொண்டு வரபோகுதாம்

Xiaomi 14 Series:அடுத்த ஆட்டதுக்கு ரெடியாகும் Xiaomi ஒன்னு இல்ல 2 போன் கொண்டு வரபோகுதாம்
HIGHLIGHTS

Xiaomi அதன் Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro கடந்த ஆண்டு டிசம்பர் 2022 யில் அறிமுகம் செய்தது

நம்பகமான tipster Digital Chat Station Weibo லீக்கில் மூலம் தகவல் கிடைத்தது

Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro ஆகியவை நவம்பர் மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம்

Xiaomi அதன் Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro கடந்த  ஆண்டு டிசம்பர் 2022 யில்  அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து  Xiaomi 14 அந்த வரிசையில் உள்ளது என்று தகவல்கள் வருகின்றன. நம்பகமான  tipster Digital Chat Station Weibo லீக்கில் Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro ஆகியவை நவம்பர் மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

நவம்பரில் றிமுகம் செய்யலாம் 

டிப்ஸ் டரின்  படி நநிறுவனம்  Xiaomi 14 series (What is the price of Xiaomi 14 Pro?) யின் Double Eleven Sales நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சீனாவில் நடைபெறும் என தெரிகிறது Double Eleven ஒற்றையர் தினம் என்றும் அழைக்கப்படும் இந்த ஷாப்பிங் நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று நடைபெறும் ஒரு பெரிய வருடாந்திர ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவாகும், மேலும் பலதரப்பட்ட பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் மற்றும் ப்ரோமோசன் வழங்குகிறது. இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. எனவே, Xiaomi 14 சீரிஸ் நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

xiaomi 14

டிப்ஸ்டரின் கூற்றுப்படி, Xiaomi 13 சீரிஸ் நல்ல விற்பனையின் காரணமாக புதிய சீரிச்ன் வெளியீட்டு டைம்லைனை முன்கூட்டியே வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, Xiaomiயின் ஸ்மார்ட்போன் சீரிஸ்களான Xiaomi 12 தொடர் மற்றும் Xiaomi 11 சீரிச்களில் விற்பனை சுழற்சி சுமார் ஒரு வருடம் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வழக்கமாக ஒரு ஸ்மார்ட்போன் சீரிஸ் அடுத்த சீரிஸ் அறிமுகம் செய்யப்பட ஒரு வருடத்திற்குப் பிறகு அறிமுகம் செய்யப்படுகிறது இருப்பினும், இந்த முறை Xiaomi 13 சீரிஸ் அதன் விற்பனை இலக்கை வெறும் 9 மாதங்களில் எட்டியுள்ளது, மேலும் ப்ரோ மாடல் கூட அனைத்து தளங்களிலும் ஸ்டாக் இல்லாமல் போகிறது.

Xiaomi 14 வரிசை மிகவும் சக்திவாய்ந்த Xiaomi 14 Pro மாடலையும் கொண்டுள்ளது. இருப்பினும், Xiaomi 14 Ultra பற்றி அறிக்கைகள் வருகின்றன, இந்த தொலைபேசி 2024 முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo