digit zero1 awards

Xiaomi 14 இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும்

Xiaomi 14 இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும்
HIGHLIGHTS

சீன கன்ஸ்யுமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமியின் Xiaomi 14 அடுத்த மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்

Xiaomi 14 சீரிஸ் பிப்ரவரி 25 அன்று மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) போது சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

Xiaomi 14 மார்ச் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்

சீன கன்ஸ்யுமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமியின் Xiaomi 14 அடுத்த மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். Xiaomi 14 சீரிஸ் பிப்ரவரி 25 அன்று மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) போது சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். கடந்த ஆண்டு நிறுவனம் இந்த தொடரை சீனாவில் அறிமுகப்படுத்தியது. Xiaomi 14 Ultra இந்த தொடரில் சேர்க்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22-ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும்.

Xiaomi 14 இந்திய அறிமுக தேதி

Xiaomi 14 மார்ச் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று நாட்டில் உள்ள நிறுவனத்தின் பிரிவு சோசியல் மீடியா தளமான X யில் ஒரு போஸ்ட்டில் தெரிவித்துள்ளது. இந்த சீரிஸின் Xiaomi 14 Pro மற்றும் Xiaomi 14 Ultra ஆகியவை நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 14 ஆனது Qualcomm யின் புதிய Snapdragon 8 Gen 3 SoC ஐ அதன் செயலியாகக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 4,610 mAh பேட்டரி 90 W வயர்டு மற்றும் 50 W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Xiaomiயின் புதிய HyperOS பயனர் இடைமுகத்துடன் கூடிய முதல் ஸ்மார்ட்போன் சீரிஸ் இதுவாகும்.

Xiaomi 14 விலை தகவல்

Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro யில் Snapdragon 8 Gen 3 SoC இருக்கிறது, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. சியோமி 14 ப்ரோவின் விலை சி.என்.ஒய் 4,999 (சுமார் ரூ. 56,500) 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் CNY 5,499 (தோராயமாக ரூ. 62,000) 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்டிக்கு மற்றும் CNY 5,999 (தோராயமாக RS,68,200) 16 GB + 1 TB வேரியன்ட் ஆகும்

இதையும் படிங்க: Jio யின்புதிய பிளான் அன்லிமிடெட் காலிங் உடன்14 OTT பல நன்மை

Xiaomi 14 இன் 8 GB + 256 GB வேரியண்டின் விலை CNY 3,999 (தோராயமாக ரூ. 50,000), CNY 4,299 இல் 8 GB + 256 GB (தோராயமாக ரூ. 48,000), 16 GB 48,000 (சுமார் ரூ. 48,000) 16 GB + 1 TB யின் விலை CNY 4,999 (தோராயமாக ரூ. 56,000).இருக்கும்.

எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் White, Rock Blue, Snow Mountain Pink மற்றும் Classic Black கலரில் இருக்கிறது கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த சந்தையில் சீனாவின் Xiaomi 18 சதவீத பங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. Redmi 13C உடன் 5G பிரிவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை கொண்டு வரும் நன்மையை Xiaomi பெற்றுள்ளது. மற்றொரு சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo