கடந்த வாரம், சியோமி அதன் Xiaomi 14 Series சீனாவில் அறிமுகப்படுத்தியது, Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்கள். இந்த போன் அக்டோபர் 31 அன்று இரவு 8 மணிக்கு (லோக்கல் டைம் வாங்குவதற்குக் கிடைக்கும். விற்பனை துவங்கிய சில மணி நேரங்களிலேயே, முதல் விற்பனையில் அமோகமாக விற்பனையானதை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் Weibo போஸ்டின் படி சியோமி 14 சீரிஸ் அதன் முதல் விற்பனையின் முதல் நான்கு மணி நேரத்திற்குள் முக்கிய சீன ஆன்லைன் ரீடைலர் விற்பனையாளர் தளங்களில் விற்றுத் தீர்ந்து, கடந்த ஆண்டின் “முதல் நாள் மற்றும் முழு நாள் விற்பனை” சாதனையை முறியடித்தது. இருப்பினும், இந்த Xiaomi 14 மற்றும் 14 Pro ஆகியவற்றின் சரியான விற்பனை புள்ளிவிவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.
விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களுக்குள், இந்த ஸ்மார்ட்போன் தொடர் முந்தைய ப்ளக்ஷிப் விட 6 மடங்கு அதிக விற்பனையை எட்டியுள்ளது என்றும் நிறுவனம் கூறுகிறது.
சியோமி 14 யின் விலை 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் கூடிய ஆரம்ப மாறுபாட்டிற்கு 3,999 யுவான் (தோராயமாக ரூ. 50,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், Xiaomi 14 Pro யின் ஆரம்ப மெமரி பதிப்பு 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இதன் விலை 4,999 யுவான் (தோராயமாக ரூ. 56,500) ஆகும்.
சியோமி 14 Series சிறப்பம்சம் பற்றி பேசினால், சியோமி 14 மற்றும் ப்ரோ யில் நிறுவனம் 1200X2600 பிக்சல் ரேசளுசன் உடன் வருகிறது, இந்த போனில் 6.36 இன்ச் யின் LTPO AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் டிஸ்ப்ளே 120HZ ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது
இந்த போன் snapdragon 8 Gen சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது இதில் மூன்று கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதில் மெயின் கேமராவாக 50MP கொடுக்கப்பட்டுள்ளது செல்பிக்கு 32MP கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: WhatApp யில் இப்பொழுது ஒரே நேரத்தில் 31 பேருக்கு வீடியோ மற்றும் வொயிஸ் கால் செய்ய முடியும்
இந்த ஸ்மார்ட்போன்களின் வலுவான விற்பனையில் அதன் கவர்ச்சிகரமான டிசைன் சமீபத்திய Snapdragon 8 Gen 3 சிப்செட் மற்றும் புதிய HyperOS சாப்ட்வேர் உட்பட பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தவிர, இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஹை photo அனுபவத்தை வழங்கும் தனித்துவமான Leica Summilux லென்ஸுடன் வருகின்றன.