20MP செல்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் Xiaomi யின் அசத்தலான போன்

Updated on 21-Aug-2023
HIGHLIGHTS

Xiaomi தனது புதிய ஃபிளாக்ஷிப் போனான Xiaomi 13Tயை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது.

அறிமுகத்திற்க்கு முன்பே, போனின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் முன்னுக்கு வந்துள்ளன.

சமீபத்தில் Xiaomi Mix 3 Fold, Pad 6 Max மற்றும் Redmi K60 Ultra ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது

Xiaomi தனது புதிய ஃபிளாக்ஷிப் போனான Xiaomi 13Tயை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்த போன் செப்டம்பர் தொடக்கத்தில் வெளியிடப்படலாம். அறிமுகத்திற்க்கு முன்பே, போனின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் முன்னுக்கு வந்துள்ளன. ஃபோனில் 1.5K தெளிவுத்திறன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் கூடிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும். போனில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கிடைக்கும். சமீபத்தில் Xiaomi Mix 3 Fold, Pad 6 Max மற்றும் Redmi K60 Ultra ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாடல் எண் 2306EPN60G உடன் FCC சான்றிதழிலும் இந்த ஃபோன் பார்க்கப்பட்டது 

Xiaomi 13T யின் எதிர்ப்பார்க்கப்படும்  சிறப்பம்சம்..

Xiaomi 12Tயின் வாரிசாக Xiaomi 13T அறிமுகப்படுத்தப்படும். DLabs யின் அறிக்கையின்படி, Xiaomi 13T ஆனது 1.5K ரேசளுசனுடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். 446ppi பிக்சல் அடர்த்தி, (2712 x 1220 பிக்சல்கள்) ரேசளுசன் மற்றும் 144Hz அப்டேட் வீதம் டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும். அதே நேரத்தில், டிஸ்ப்ளே 2600 நிட்கள் வரை ஹை ப்ரைத்னஸ் வழங்கப்படும். மீடியா டெக் டிமன்சிட்டி 8200-அல்ட்ரா ப்ரோசெசர் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் இந்த ஃபோன் வழங்கும்.

போட்டோ எடுப்பதற்கு சக்திவாய்ந்த கேமரா அமைப்பு போனின் கிடைக்கும். ஃபோனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட லைக்கா 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. போனில் 50 மெகாபிக்சல் லைக்கா 2x டெலிஃபோட்டோ லென்ஸ், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைப் பெறும். அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு  20 மெகாபிக்சல் முன் கேமராவை போனில் காணலாம். 30fps இல் 4k வரை வீடியோவை ஃபோன் மூலம் பதிவு செய்யலாம்.

போனின் பேட்டரியைப் பற்றி பேசுகையில், இது ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 120W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000 mAh பேட்டரியை பேக் செய்யும். கனேக்டிவிட்டிக்கு ஃபோனில் USB-C போர்ட், Wi-Fi 7, புளூடூத் 5.4 மற்றும் NFC ஆகியவற்றுக்கான ஆதரவு இருக்கும். வாட்டர் மற்றும் டஸ்ட் ரேசிச்டன்ட் IP68 ரேட்டிங் போனில் கிடைக்கிறது. போன கருப்பு மற்றும் ஆல்பைன் நீல வண்ண விருப்பங்களில் கிடைக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :