DSLR கேமரா போன்ற வடிவில் அறிமுகமான Xiaomi 13 Ultra போன் டாப் 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.

DSLR  கேமரா போன்ற வடிவில் அறிமுகமான Xiaomi 13 Ultra போன் டாப் 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

Xiaomi அதன் புதிய போன் Xiaomi 13 Ultraவை சீனாவில் அறிமுகம் செய்தது,

Xiaomi 13 Ultra கொண்ட கேமரா லைக்கா பிராண்டிங்குடன் கொடுக்கப்பட்டுள்ளது,

Xiaomi 13 Ultra உடன், Xiaomi ஹைபர்னேஷன் மோடை வழங்கியுள்ளது,

Xiaomi அதன் புதிய போன் Xiaomi 13 Ultraவை சீனாவில் அறிமுகம் செய்தது, Xiaomi 13 Ultra என்பது நிறுவனத்தின் புதிய ப்ளாக்ஷிப் போனாகும்.. Xiaomi 13 Ultra கொண்ட கேமரா லைக்கா பிராண்டிங்குடன் கொடுக்கப்பட்டுள்ளது, இது ஹைஎண்ட் கஸ்டம் செமிமிக்ரான் லென்ஸாகும். Xiaomi 13 Ultra உடன், Xiaomi ஹைபர்னேஷன் மோடை வழங்கியுள்ளது, இது பேட்டரியை அதிக அளவில் மேம்படுத்துவதாகக் கூறுகிறது. இந்த மோடின் உதவியுடன், 1 சதவீத பேட்டரியை சேமித்த பிறகும், போனை 60 நிமிடங்கள் பயன்படுத்த முடியும்.

Xiaomi 13 Ultra விலை தகவல்.

Xiaomi 13 Ultra இன் 12 ஜிபி ரேம் கொண்ட 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை 5,999 சீன யுவான் அதாவது சுமார் ரூ. 71,600, அதே சமயம் 16 ஜிபி ரேம் கொண்ட 512 ஜிபி ஸ்டோரேஜின் விலை 6,499 சீன யுவான் அதாவது சுமார் ரூ.77,500. போனின் 16 ஜிபி ரேம் கொண்ட 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 7,299 யுவான் அதாவது சுமார் 87,000 ரூபாய். ஆகும்  Xiaomi 13 Ultra கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் வாங்கலாம். இந்தியாவில் இந்த போன் அறிமுகம் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை.

Xiaomi 13 Ultra சிறப்பம்சம் 

Xiaomi 13 Ultra  டிஸ்பிளே 

Xiaomi 13 Ultra ஆனது 6.73-இன்ச் AMOLED WQHD+ டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,300 nits உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Xiaomi 13 Ultra ப்ரோசெசர் :-

Xiaomi 13 Ultra போனில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MIUI 14 உள்ளது. 4nm Snapdragon 8 Gen 2 ப்ராசஸருடன் கிராபிக்ஸ் செய்ய Adreno 740 GPU உள்ளது.

Xiaomi 13 Ultra ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 

 ஃபோனில் 16GB வரை LPPDR5X ரேம் மற்றும் 1TB UFS 4.0 ஸ்டோரேஜ் உள்ளது.

Xiaomi 13 Ultra கேமரா 

Xiaomi 13 Ultra வின் பின்புறத்தில் 4 கேமரா கொண்டுள்ளது  இது Leica சப்போர்டுடன் வரும்.முதல் லென்ஸ் 50 மெகாபிக்சல் 1 இன்ச் IMX989 சென்சார் ஆகும். மற்ற மூன்று லென்ஸ்கள் 50-மெகாபிக்சல் IMX858 சென்சார்கள். கேமராவுடன் 6 ஃபோகல் லென்ஸ்கள் உள்ளன. முன்பக்கத்தில் செல்பிக்கு 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டோ எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஃபாஸ்ட் ஷாட் மோடுடன் கேமரா வருகிறது. இந்த மோடில் வெறும் 0.8 வினாடிகளில் போட்டோக்களை கிளிக் செய்ய முடியும்.

Xiaomi 13 Ultra யின் பேட்டரி.

Xiaomi 13 Ultra வில் 5000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 90W வயர் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு உள்ளது. வெறும் 34 நிமிடங்களில் தொலைபேசியை வயர் மூலம் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன் வாட்டர் ரெசிஸ்டுக்கான IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதில் இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo