சியோமி நிறுவனம் சியோமி 13 சீரிஸ் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக சியோமி 13 சீரிஸ் மாடல்கள் டிசம்பர் 01 ஆம் தேதி அறிமுகமாகிறது. சியோமி 13 சீரிசில்- சியோமி 13, சியோமி 13 ப்ரோ மற்றும் MIUI 14 உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என தெரிகிறது.
முன்னதாக தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வகையில், சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்களில் இந்த பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. சியோமி 13 மாடலில் 6.2 இன்ச் FHD+ 120Hz OLED ஸ்கிரீன், சியோமி 13 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் சாம்சங் 2K E6 AMOLED வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
சியோமி 13 ப்ரோ மாடலில் 1-இன்ச் சோனி IMX989 சென்சார், சியோமி 13 மாடலில் 50MP சோனி IMX8 சீரிஸ் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் OIS சப்போர்ட் வழங்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன் புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
டீசரின் படி சியோமி 13 ஸ்மார்ட்போன் ஃபிளாட் ஸ்கிரீன், மற்றொரு மாடலில் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. முந்தைய மாடல்களை போன்றே இரு மாடல்களிலும் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படுகிறது. சியோமி 13 மாடலில் உள்ள ஃபிளாட் ஸ்கிரீன் உயர் ரக OLED பேனல், அல்ட்ரா நேரோ பெசல்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த போன்களில் லெய்கா ஆப்டிக்ஸ் வழங்கப்படுகிறது