Xiaomi 13 மற்றும் iQoo 11 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை ஒத்திவைக்கப்பட்டது காரணம் என்ன ?

Updated on 01-Dec-2022
HIGHLIGHTS

Xiaomi 13 சீரிஸ் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது

iQoo 11 செரிஸ் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது

இரண்டு போன்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருந்தது

சியோமி மற்றும் ஐகூ நிறுவனங்கள் தங்களின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வந்தன. இந்த நிலையில், புது ஃபிளாக்‌ஷிப் மாடல்களின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக சியோமி மற்றும் ஐகூ நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து இரு நிறுவனங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், சீனா உலக அரங்கில் இத்தனை வளர்ச்சியை அடைய உதவியர் எனும் பெருமைகளுக்கு உரித்தானவர் ஜியாங் ஜெமின். ரத்தப் புற்று நோய் காரணமாக, உடல் உறுப்புகள் செயலிழந்ததை அடுத்து இவர் உயிரிழந்தார். இவருக்கு வயது 96. இவர் உயிரிழந்த தகவல் வெளியானதும், சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போவில் சியோமி 13 சீரிஸ் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

அது போலவே, iQoo 11 சீரிஸின் வெளியீட்டை ஒத்திவைத்ததாக அறிவிக்க iQoo Weibo க்கு அழைத்துச் சென்றது. இந்த சீரிஸ் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. Snapdragon 8 Gen 2 SoC இதில் கொடுக்கப்பட இருந்தது. Xiaomi ஐப் போலவே, iQoo 11 தொடருக்கான புதிய வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடவில்லை.

மேலும் புது ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது. சியோமி வரிசையில் ஐகூ நிறுவனமும் தனது ஐகூ 11 சீரிஸ் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்து இருக்கிறது. ஐகூ நிறுவனமும் தனது புது ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என சரியான தேதியை தற்போது அறிவிக்கவில்லை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :