Xiaomi 13 Pro இந்திய வெளியீடு தேதி அறிமுகம் ஆப்பிள் மற்றும் சாம்சங்க்கு போட்டியாக இருக்கும்.

Updated on 02-Mar-2023
HIGHLIGHTS

ஆப்பிள், சாம்சங் ஆகியவை சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்திய சந்தையில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சியோமி 13 சீரிஸ் சர்வதேச வெளியீடு இந்திய வெளியீட்டின் போதே நடைபெறும்.

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் போர் ஸ்மார்ட்போன் துறையில் நடந்து வருகிறது. ஆப்பிள், சாம்சங் ஆகியவை சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆப்பிள் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐபோன் 14 சீரிஸை  அறிமுகப்படுத்தியது, அதற்குப் போட்டியாக சாம்சங் தனது கேலக்ஸி எஸ்22 வரிசையை அறிமுகப்படுத்தியது. இதற்குப் பிறகு, Xiaomi 13 Pro வெளியீடு நடக்க உள்ளது. சாம்சங் மற்றும் சியோமியின் ஆப்பிள் ஐபோன் 14 ஆகியவற்றிலிருந்து மலிவான முதன்மை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் போட்டி வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்திய சந்தையில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி 12S சீரிசை தொடர்ந்து சியோமி மற்றும் லெய்கா கூட்டணியில் உருவாகி இருக்கும் ஸ்மார்ட்போன் இது ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி 13 சீரிஸ் சர்வதேச வெளியீடு இந்திய வெளியீட்டின் போதே நடைபெறும். இந்தியாவில் சியோமி 13 ப்ரோ மாடலின் அறிமுக நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு துவங்குகிறது. சியோமி 13 ப்ரோ அறிமுக நிகழ்வு சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டுவிட்டர் அக்கவுண்ட்களில் நேரலை செய்யப்படும்.

இந்திய வெளியீட்டின் போதே சியோமி 13 ப்ரோ மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி 13 இந்திய வெளியீடு பற்றி சியோமி நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த மாடல் அறிமுகம் செய்யப்படாது என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் சியோமி 12 ப்ரோ மாடலை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது.

அம்சங்களை பொருத்தவரை சியோமி 13 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 2K Flexible E6 சாம்சங் AMOLED LTPO ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், விசி லிக்விட் கூலிங், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4820 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :