Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 8 ஜென் 2 ப்ரோசெசருடன் அறிமுகம்.

Updated on 12-Dec-2022
HIGHLIGHTS

சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன

சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன

சியோமி 13 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 574 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 425 என துவங்குகிறது

சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சியோமி 12 மற்றும் 12 ப்ரோ ஸ்மாரட்போன்களின் மேம்பட்ட மாடல் ஆகும். சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ரெட்மி பட்ஸ் 4, வாட்ச் S1 ப்ரோ, MIUI 14 உள்ளிட்டவைகளையும் அந்நிறுவனம் அறிவித்தது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

 சியோமி 13 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 574 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 425 என துவங்குகிறது. சியோமி 13 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 718 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 59 ஆயிரத்து 323 என துவங்குகிறது. புதிய சியோமி 13 சீரிஸ் மாடல்களின் முன்பதிவு சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை டிசம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது.

Xiaomi 13 சிறப்பம்சம்.

புதிய சியோமி 13 சீரிஸ் மாடல்களில் AMOLED டிஸ்ப்ளே, இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட், 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன், HLG சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ரெகுலர் மாடலில் 6.36 இன்ச் ஃபிளாட் ஸ்கிரீன், FHD+ ரெசல்யூஷன், ப்ரோ மாடலில் 6.73 இன்ச் QHD+ டிஸ்ப்ளே, வளைந்த எட்ஜ்கள் வழங்கப்பட்டுள்ளன. புகைப்படங்களை எடுக்க சியோமி 13 மாடலில் லெய்கா பிராண்டு கொண்ட மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இவற்றில் 50MP OIS வசதி கொண்ட சோனி IMX800 சென்சார், 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ கேமரா உள்ளது. சியோமி 13 ப்ரோ மாடலில் 1-இன்ச் அளவில் சோனி IMX989 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. செல்ஃபி எடுக்க இரு மாடல்களிலும் 16MP கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் இரு மாடல்களிலும் குவால்காம் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி 13 மற்றும் 13 ப்ரோ மாடல்களில் முறையே 4500 எம்ஏஹெச் மற்றும் 4820 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 67 வாட் மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய சியோமி 13 சீரிஸ் மாடல்கள் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14 ஒஎஸ், 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத், NFC, IR பிளாஸ்டர், யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளன. இவை வைட், பிளாக், கிரீனஅ மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. சியோமி 13 மாடல் ஃபிளேம் ரெட், சஃபயர் புளூ, ஹரிகேன் எல்லோ, ஜங்கில் கிரீன் மற்றும் சிமெண்ட் கிரே என ஐந்து விதமான லிமிடெட் கஸ்டம் நிறங்களிலும் கிடைக்கின்றன

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :