Xiaomi 13 Pro இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது, 22 ஆயிரம் வரை டிஸ்கவுண்டில் வாங்கலாம்.

Xiaomi 13 Pro  இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது, 22 ஆயிரம் வரை டிஸ்கவுண்டில் வாங்கலாம்.
HIGHLIGHTS

சியோமி சமீபத்தில் தனது பிரீமியம் போன் சியோமி 13 ப்ரோவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Xiaomi 13 pro இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. மொபைலின் முதல் விற்பனை இன்று அதாவது மார்ச் 10, 2022 மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

சியோமி 13 ப்ரோவின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.79,999.ஆகும்,

ஸ்மார்ட்போன் பிராண்டான சியோமி சமீபத்தில் தனது பிரீமியம் போன் சியோமி 13 ப்ரோவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. மொபைலின் முதல் விற்பனை இன்று அதாவது மார்ச் 10, 2022 மதியம் 12 மணிக்கு தொடங்கும். சியோமி 13 ப்ரோவின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.79,999.ஆகும், ஆனால் முதல் விற்பனையின், போன் வாங்குவதற்கு நிறுவனம் நல்ல தள்ளுபடியை வழங்குகிறது. அனைத்து தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன், போனை வாங்கும்போது ரூ.22,000 வரை சேமிக்க முடியும். சிறந்த கேமரா மற்றும் வலுவான செயலாக்க ஆதரவு போனுடன் கிடைக்கிறது.

Xiaomi 13 Pro யின் விலை மற்றும் ஆபர் 

Xiaomi 13 ப்ரோ ஒற்றை ஸ்டோரேஜில் வருகிறது, அதன் 12 ஜிபி ரேம் கொண்ட 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.79,999. ஆனால் முதல் விற்பனையில், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஐசிஐசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் ஃபோனை வாங்கினால் ரூ.10,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம் மேலும் இந்த போனை ரூ.69,999க்கு வாங்கலாம்.

மறுபுறம், நிறுவனம் Xiaomi / Redmi அல்லாதவற்றில் ரூ. 8,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும், பழைய Xiaomi / Redmi ஸ்மார்ட்போன்களுக்கு ஈடாக ரூ. 12,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் வழங்கப் போகிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான Amazon India, Mi Homes, Mi Retail Partners ஆகியவற்றிலிருந்து இந்த ஃபோனை வாங்கலாம்.

Xiaomi 13 Pro சிறப்பம்சம்.

6.73 இன்ச் LTPO AMOLED, ரெஸலுசன் 1440 x 3200 பிக்சல்கள், 120Hz அப்டேட் வீதம் மற்றும் 20: 9 ரேஷியோ வழங்கப்படுகிறது., ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 14 கொண்டுள்ளது, இது ஆக்டா கோர் குவால்காம் SM8550-AB Snapdragon 8 Gen 2 (4 nm)  வேலை செய்கிறது 

8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் , 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் , 12GB RAM மற்றும் 256GB மற்றும் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது 

பின்புறத்தில் f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 50.3-மெகாபிக்சல் முதன்மை கேமரா, f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் செகண்டரி கேமரா மற்றும் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் மூன்றாவது கேமரா கொண்டுள்ளது  4820mAh பேட்டரி, 120W சார்ஜிங் கிடைக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo