200MP ட்ரிபிள் கேமராவுடன் Xiaomi 12T சீரிஸ் அக்டோபர் 4அறிமுகமாகும்.
Xiaomi 12T சீரிஸின் வெளியீட்டு தேதியை கம்பெனி உறுதி செய்துள்ளது
Xiaomi 12T இன் உலகளாவிய வெளியீடு அக்டோபர் 4 ஆம் தேதி நடக்க உள்ளது.
Xiaomi 12T வெண்ணிலா 108 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக கூறப்படுகிறது.
Xiaomi 12T சீரிஸின் வெளியீட்டு தேதியை கம்பெனி உறுதி செய்துள்ளது. Xiaomi 12T இன் உலகளாவிய வெளியீடு அக்டோபர் 4 ஆம் தேதி நடக்க உள்ளது. Xiaomiயின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் சீரிஸ் 200MP கேமராவுடன் வரப் போகிறது, இது நீண்ட காலமாக விவாதிக்கப்படுகிறது. இதுவரை வந்துள்ள மெசேஜ்களின்படி, Xiaomi 12T Pro-வில் 200 மெகாபிக்சல் சென்சார் காணப்படலாம். Xiaomi 12T வெண்ணிலா 108 மெகாபிக்சல் சென்சார் கொண்டதாக கூறப்படுகிறது.
Xiaomi 12T சீரிஸின் வெளியீட்டு தேதியை கம்பெனி அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளது. சீரிஸின் சிறப்பம்சமாக 200MP இமேஜிங் செட்அப் உள்ளது. Xiaomi 12T மற்றும் Xiaomi 12T Pro என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தத் சீரிஸில் வெளியிடப்படும். பொதுவாகக் காணப்படுவது போல, ப்ரோ மாடல் கம்பெனி சிறப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சிறந்த பியூச்சர்களுடன் வருகிறது. இதேபோல், 200 மெகாபிக்சல் கேமரா Xiaomi 12T ப்ரோவில் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போன் மூன்று கேமரா செட்அப் உடன் வரலாம், இதில் பிரைமரி சென்சார் Samsung HP1 200MP ஆக இருக்கும். இரண்டாம் நிலை சென்சார் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸாக இருக்கலாம். மூன்றாவது சென்சார் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Xiaomi சீரிஸ் தொடர்பான சமீபத்திய டீசரையும் வெளியிட்டுள்ளது, இது 200 மெகாபிக்சல் கேமரா செட்அப் எடுத்துக்காட்டுகிறது. Xiaomi அதற்கு Xiaomi ProCut டேக் கொடுத்துள்ளது.
12T வெண்ணிலா வேரியண்ட் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் 108 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸைக் கொண்டிருக்கும். Xiaomi 12T Pro யில் Qualcomm இன் சமீபத்திய ப்ரோசிஸோர் Snapdragon 8+ Gen 1ஐ Xiaomi 12T Pro இல் காணலாம். இதில் 1,220 x 2,712 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம். 120Hz ரிபெரஸ் ரேட் போனில் காணலாம்.
Xiaomi 12T இன் ஸ்பெசிபிகேஷன்களைப் பற்றி பேசுகையில், இது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரிபெரேஸ் ரேட் உடன் வரலாம். HDR10+ க்கான சப்போர்ட்டை இதில் காணலாம். போனில் MediaTek Dimensity 8100 சிப் இருக்கலாம். இந்த போன் 8 GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வகைகளில் வெளியிடப்படலாம். Xiaomi 12T Pro ஆனது 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகைகளில் வெளியிடப்படலாம். போன்கள் கிளீயர் ப்ளூ, காஸ்மிக் பிளாக் மற்றும் லூனார் சில்வர் கலர் வெளியிடப்படலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile