சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் டிசம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங்கின் புது கேலக்ஸி ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் முதல் முறையாக முதல் முறை இன்பினிட்டி -O டிஸ்பிளே உடன் வருகிறது.
ஏற்கனவே இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் . (FCC) வெப்சைட்டில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன் டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க வெப்சைட்டில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.
சாம்சங் மற்றும் ஹூவாய் என இரு நிறுவனங்களுக்கும் போ (BOE) LCD .டிஸ்ப்ளேவினை விநியோகம் செய்ய இருக்கிறது. எனினும், நோவா 4 மாடலை விட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே தலைசிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி A8S எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்
– 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி
– 3400 Mah .பேட்டரி
– அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும்