விவோ அதன் புதிய பட்ஜெட் போன் Vivo Y78+ அறிமுகம் செய்துள்ளது, இந்த போனில் ஸ்னாப்ட்ரகன் 695 ப்ரோசெசர் மற்றும் 12GB வரையிலான ரேமுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இது ஆண்ட்ராய்டு 13 யில் வேலை செய்கிறது.
தற்பொழுது இந்த போன் உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது மூன் ஷேடோ பிளாக், வார்ம் சன் கோல்ட் மற்றும் ஸ்கை ப்ளூ வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜ் கூடிய இதன் 8 ஜிபி ரேம் விலை 1599 யுவான் (சுமார் ரூ. 19,000) மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 12 ஜிபி ரேம் 1999 யுவான் (தோராயமாக ரூ. 24,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் இந்த போன் அறிமுகம் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
விவோவின் இந்த லேட்டஸ்ட் போனில் 6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே வழங்குகிறது. இதில் 120ஹாட்ஸ் ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. இதனுடன் இதன் டிஸ்பிளே 100% DCI-P3 கலர் கெமர் மற்றும் 1300 நீட்ஸ் பிரைட்னஸ் வழங்குகிறது இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையின் கீழ் OriginOS OS 3 சப்போர்ட் செய்கிறது, மேலும் இந்த போன் 12 ரேம் உடன் 256 GB ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது, இந்த போனின் ப்ரோசெசரை பற்றி பேசினால் ஒக்ட்டா கோர் Snapdragon 695 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கிடைக்கிறது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடன் வருகிறது. செகண்டரி நிலை கேமரா 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இந்த போனில் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 44W பிளாஷ் சார்ஜ் சப்போர்ட் செய்கிறது, மேலும் இதில் கனெக்டிவிட்டியை பற்றி பேசினால் 5G, wifi, ப்ளூடூத் 5.1, USB டைப் C போர்ட் சப்போர்ட் செய்கிறது.