Vivo வின் இந்த போனில் அதிரடியாக 1000ரூபாய் டிஸ்கவுன்ட்

Updated on 08-Aug-2024
HIGHLIGHTS

Vivo இப்போது சில காலமாக Y சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு சிறப்பு கொள்கையை பின்பற்றி வருகிறது

8ஜிபி + 128ஜிபி மாடலில் வரும் Vivo Y58 5G விலை 1,000 ரூபாய் குறைந்துள்ளது

Vivo Y58 5G இப்போது 8GB + 128GB மாடலுடன் ரூ.18,499க்கு கிடைக்கும்

Vivo இப்போது சில காலமாக Y சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு சிறப்பு கொள்கையை பின்பற்றி வருகிறது, இதன் பிறகு அறிமுகமாகிய சில மாதங்களுக்கு பிறகு Y சீரிஸ் போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது மற்றும் இப்பொழுது ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமகியதை பார்த்தோம், நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு முன்பு Vivo Y58 5G ஐ அறிமுகப்படுத்தியது, அதன் விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளது. 8ஜிபி + 128ஜிபி மாடலில் வரும் Vivo Y58 5G விலை 1,000 ரூபாய் குறைந்துள்ளது. 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 6 ஆயிரம் Mah பேட்டரி கொண்ட இந்த போன் இப்போது எவ்வளவு விலைக்கு கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

Vivo Y58 5G ஆபர் விலை

விவோ இந்தியாவில் அதன் Vivo Y58 போனை ஜூன் மாதம் 19,499.ரூபாய்க்கு அறிமுகம் செய்தது இப்பொழுது இந்த போனின் விலை 1000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

Vivo-Y58-5G-offer-price.j

Vivo Y58 5G இப்போது 8GB + 128GB மாடலுடன் ரூ.18,499க்கு கிடைக்கும். புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பிளிப்கார்ட், அமேசான் தவிர, விவோ இந்தியாவின் இ-ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது.

Vivo Y58 5G சிறப்பம்சம்

Vivo Y58 5G யில் 6.72 இன்ச் யின் LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதன் ரேசளுசன் FHD+ ரெப்ரஸ் ரேட்டுடன் மற்றும் பீக் ப்ரைட்னஸ் 1024 நித்ஸ் இருக்கிறது., இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 4 Gen 2 செயலி உள்ளது. மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. விர்ச்சுவல் ரேம் நீட்டிப்பு மூலம் ரேமை 8ஜிபி வரை அதிகரிக்கலாம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பகத்தை 1டிபி வரை அப்டேட் செய்யலாம்.

Vivo-Y58-

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

Vivo Y58 5G ஆனது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மற்ற அம்சங்களில் இரட்டை ஸ்பீக்கர்கள், IP64 ரேட்டிங் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் ஆகியவை அடங்கும். டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் திக்னஸ் 7.99 mm மற்றும் எடை 199 கிராம் ஆகும்.

இதையும் படிங்க:Amazon Great Freedom Festival Sale 35,000ரூபாய்க்குள் வரும் போனில் சிறந்த ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :