Vivo சமீபத்தில் இந்தியாவில் Vivo Y58 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப் போவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். சமீபத்தில் டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் வரவிருக்கும் விவோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை வெளியிட்டார். Vivo Y58 5G பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்.
Vivo Y58 5G யின் விலை பற்றி பேசினால், இதன் 8GB RAM + 128GB வேரியன்ட் விலை 19,499ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது,, 23,999 அதிகபட்ச ரீடைலர் விலை கொண்ட டிவைசின் பாக்ஸில் போட்டவை டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். எனவே இந்த லீக் விலை துல்லியமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Vivo Y58 5G சுதன்ஷு ஷேர் செய்யப்பட்ட ட்விட்டரின் அடிபடையில் இந்த போனில் 6.72 இன்ச் LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இதில் FHD+ ரேசளுசன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 1024 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 4 Gen 2 செயலி இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கும். விர்ச்சுவல் ரேம் நீட்டிப்பு மூலம் 8ஜிபி வரை அதிகரிக்கலாம் மற்றும் மைக்ரோ SD கார்டு மூலம் ஸ்டோரேஜ் 1டிபி வரை அதிகரிக்கலாம்.
கேமரா செட்டப் பற்றி பேசுகையில் இந்த போனில் பின்புறத்தில் 50-மேகபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2-மேகபிக்ச்ல் செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது, இந்த போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இந்த Vivo ஸ்மார்ட்போனில் 6,000mAh பேட்டரி இருக்கும், இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் மற்ற அம்சங்கள் இரட்டை ஸ்பீக்கர்கள், IP64 மதிப்பீடு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர். பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், தொலைபேசியின் தடிமன் 7.99 மிமீ மற்றும் எடை 199 கிராம்.
இதையும் படிங்க: Airtel யின் புதிய பிளான் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான்