Vivo Y55s 5G: Vivo ஒரு சிறந்த டிஸைனுடன் ஒரு போன் அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo Y55s 5G: Vivo ஒரு சிறந்த டிஸைனுடன் ஒரு போன் அறிமுகப்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ (Vivo) தனது புதிய 5G ஸ்மார்ட்போனான Vivo Y55s 5G அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo Y55s 5G ஆனது 6.55 இன்ச் முழு HD பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போனியில் 50 மெகாபிக்சல் டூவல் கேமரா செட்டப் மற்றும் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ (Vivo) தனது புதிய 5G ஸ்மார்ட்போனான Vivo Y55s 5G அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் முதலில் உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது தைவான், ஹாங்காங் போன்ற பிராந்தியங்களில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Vivo Y55s 5G ஆனது 6.55 இன்ச் முழு HD பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனியில் 50 மெகாபிக்சல் டூவல் கேமரா செட்டப் மற்றும் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போனின் மற்ற குறிப்புகள் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்வோம்.

Vivo Y55s 5G யின் விலை 
Vivo Y55S 5G ஆனது Galaxy Blue மற்றும் Starlight Black கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. 4 GB ரேம் கொண்ட அதன் 128 GB ஸ்டோரேஜ் வெரியாண்டின் விலை 7990 NTD (கிட்டத்தட்ட ரூ. 21,000) மற்றும் 6 GB ரேம் கொண்ட 128 GB ஸ்டோரேஜ் வெரியாண்டின் விலை NTD 8,490 (கிட்டத்தட்ட ரூ. 22,500) ஆகும்.  

Vivo Y55s 5G யின் ஸ்பெசிபிகேஷன் 
Vivo Y55S 5G ஆனது 1080 x 2408 பிக்சல் ரெசொலூஷன் மற்றும் 60Hz ரிபெரேஸ் ரெட்டுடன் 6.55-இன்ச் முழு HD பிளஸ் LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மீடியா டெக் டைமென்சிட்டி 700 ப்ரோசிஸோர் உடன் 128 GB ஸ்டோரேஜையும் 6 GB வரை ரேம் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான FunTouch OS 12 போனில் கொடுக்கப்பட்டுள்ளது. போனில் செக்யூரிட்டிற்காக சைட்மௌண்ட்டெட்  பொருத்தப்பட்ட பிங்கர் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது.  

Vivo Y55s 5G யின் கேமரா
போனுடன் டூவல் கேமரா செட்டப் உள்ளது, இது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் ஷூட்டர் ஆகும். LED பிளாஷ் பின்புற கேமராவுடன் சப்போர்ட் செய்யப்படுகிறது. 1080p வீடியோ பதிவை 60fps வேகத்தில் பின்பக்க கேமரா மூலம் செய்யலாம். செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. 

Vivo Y55s 5G யின் பேட்டரி
போன் 18W பாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட் கிடைக்கும். போனியின் பிற கனெக்ட்டிவிட்டிகளைப் பற்றி பேசுகையில், இது டூவல் சிம் சப்போர்ட், 5G, Wi-Fi, புளூடூத் 5.1, NFC, GPS மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவற்றிற்கான சப்போர்ட்டை கொண்டுள்ளது.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo