6,500mAh பேட்டரியுடன் Vivo யின் புதிய போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

சீனா ஸ்மார்ட்போன் பிராண்டான Vivo அதன் Y-சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த போனின் பெயர் Vivo Y39 ஆகும். பிரீமியம் டிசைன், சக்திவாய்ந்த பேட்டரி கொண்டுள்ளது
விலையைப் பொறுத்தவரை, Vivo Y39 5G இன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999
சீனா ஸ்மார்ட்போன் பிராண்டான Vivo அதன் Y-சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனின் பெயர் Vivo Y39 ஆகும். பிரீமியம் டிசைன், சக்திவாய்ந்த பேட்டரி, ராணுவ தர நீடித்துழைப்பு மற்றும் AI-இயங்கும் ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் போனை அதன் பிரிவில் தனித்துவமாக்குகிறது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo Y39 5G விலை
விலையைப் பொறுத்தவரை, Vivo Y39 5G இன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999 மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.18,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் லோட்டஸ் பர்பிள் மற்றும் ஓஷன் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிற ரீடைளர் விற்பனைக் கடைகளில் இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது. அறிமுகச் சலுகையின் கீழ், ஏப்ரல் 6, 2025 வரை ரூ.1,500 பிளாட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
Vivo Y39 5G சிறப்பம்சம்
- டிஸ்ப்ளே : Vivo Y39 5G ஃபோன் 1608 × 720 பிக்சல் ரேசளுசனுடன் 6.68-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை சப்போர்ட் செய்கிறது . இது LCD பேனலில் கொண்டுள்ளது . இந்தத் ஸ்க்ரீன் 120Hz ரெப்ராஸ் ரேட் 1000nits ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது
- பர்போமான்ஸ் : Vivo Y39 5G போன் ஆண்ட்ராய்டு 15 யில் வரும், இது Funtouch OS 15 யில் வேலை செய்யும். பர்போமன்சிர்க்காக , இந்த ஸ்மார்ட்போனில் 4 நானோமீட்டர் உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்ட குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 ஆக்டா-கோர் ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும், இது 2.2GHz கிளாக் ஸ்பீடில் இயங்கும் பவர் கொண்டது.
- ரேம் ஸ்டோரேஜ் : இந்த ஃபோனில் 8GB LPDDR4x RAM மற்றும் 128GB / 256GB (UFS 2.2) ஸ்டோரேஜ் உள்ளது
- கேமரா: கேமரா செட்டிங் பற்றிப் பேசுகையில், Y39 5G-யின் பின்புறத்தில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் முதல் கேமராவும், f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவும் உள்ளன. முன்பக்கத்தில், f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
- பேட்டரி: இந்த போனில் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபோன் இராணுவ தர நீடித்துழைப்பு (MIL- STD-810H) மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP64 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம், USB டைப் C போர்ட், 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.0 மற்றும் GPS ஆகியவை அடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile