Vivo Y300 5G போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Updated on 22-Nov-2024

Vivo இந்திய சந்தையில் அதன் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன Vivo Y300 5G அறிமுகம் செய்துள்ளது, இந்த போனில் Snapdragon 4 Gen 2 ப்ரோசெஸ்ருடன் வருகிறது மேலும்ம் இங்கு Vivo Y300 5G போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Vivo Y300 5G விலை

Vivo Y300 5G யின் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை 21,999ரூபாய் மற்றும் 8GB + 256GB ஸ்டாரே வேரியன்ட் விலை 23,999ரூபாயாகும். இந்த ஸ்மார்ட்போன் Phantom Purple, Emerald Green மற்றும் Titanium Silver ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஃபோன் இன்று முன்கூட்டிய ஆர்டருக்குக் கிடைக்கிறது, மேலும் Vivo.com, Flipkart, Amazon.in மற்றும் பிற ஆஃப்லைன் ஸ்டோர்களில் நவம்பர் 26 முதல் விற்பனை தொடங்கும். இதன் அறிமுக சலுகையாக பேங்க் ஆபர் கீழ் 2,000ரூபாய் பிளாட் கேஷ்பேக் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த போனை வாங்கினால், Vivo TWS 3e-ஐ தள்ளுபடி விலையில் ரூ.1499க்கு வாங்கலாம்.

Vivo Y300 5G டாப் சிறப்பம்சங்கள்.

டிஸ்ப்ளே

Vivo Y300 5G ஆனது 6.67-இன்ச் முழு HD+ E4 AMOLED டிஸ்ப்ளே 2400×1080 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் , 1800 nits வரை ஹை ப்ரைட்னாஸ் , 100% DCI-P3 மற்றும் 107% NTSC கலர் ரேன்ஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.

Vivo Y300 Plus 5G

ப்ரோசெசர்

ஃபோனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4 என்எம் மொபைல் இயங்குதளம் அட்ரினோ 613 ஜிபியு உடன் உள்ளது. இந்த ஃபோனில் 128GB / 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் மற்றும் 8GB LPDDR4x ரேம் உள்ளது, இதை microSD மூலம் 1TB வரை விரிவாக்கலாம். இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் வேலை செய்கிறது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் வேலை செய்கிறது.

கேமரா

இந்த போனின் கேமரா செட்டப் பற்றி பேசுகையில் பின்புறத்தில் f/1.79 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 32 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

இந்த போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் sapportudan 5000mAh பேட்டரி உள்ளது. இந்த போனில் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் செக்யூரிட்டி உறுதி செய்கிறது.

கனெக்டிவிட்டி

டைமென்சன் பற்றி பேசுகையில் இந்த போனில் 163.17mm நீளம் இருக்கிறது அகலம் 75.93 மிமீ, திக்னஸ் 7.79 mm மற்றும் எடை 190 கிராம். கனெக்டிவிட்டி விருப்பங்களில் இரட்டை சிம் சப்போர்ட் வழங்குகிறது , 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் USB டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். ஒலி செட்டிங்கிற்க்கு, இது USB டைப்-சி ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:OPPO யின் புதிய போன் அறிமுகம், விலை மற்றும் தகவலை பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :