Vivo இந்தியாவில் அதன் என்ட்ரி லெவல் போன் ஆன Vivo Y29 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. Vivo யின் இந்த போன் Y28 5G யின் அப்க்ரேடட் வெர்சனாகும், இந்த போனில் 5,500mAh பேட்டரி உடன் வருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Vivo Y29 5G இன் 4ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.13,999, 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.15,999, 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.16,999 மற்றும் ரூ.8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.19,999. இந்த ஸ்மார்ட்போன் Diamond Black, Glacier Blue மற்றும் Titanium Gold ஆகிய கலர்களில் வருகிறது .
டிஸ்ப்ளே:-Vivo Y29 5G யில் 6.68 இன்ச் LCD பஞ்ச ஹோல் டிஸ்ப்ளே உடன் இது HD+ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது.
ப்ரோசெசர்:-இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch பிளாட்பார்மில் வேலை செய்கிறது. Y29 5G ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்ஷன் 6300 சிப்செட்டைக் கொண்டுள்ளது.
ரேம் ஸ்டோரேஜ்:-இந்த ஃபோனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரிக்க் முடியும்.
கேமரா :-இதன் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், Vivo Y29 5G யில் 50மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் டைனமிக் லைட் LED ப்ளாஷ் உடன் 0.08 மெகாபிக்சல் உடன் அக்சிலரி கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதன் முன் பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
பேட்டரி:-இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் 5,500mAh பேட்டரி உடன் 44W ரேபிட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டி:- மேலும் இந்த போனில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP64 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது, மேலும் டைமென்சன் பற்றி பேசுகையில், தொலைபேசியின் நீளம் 165.75 mm, அகலம் 76.1 மிமீ, திக்னஸ் 8.1 mm மற்றும் எடை 198 கிராம். கனெக்டிவிட்டி விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.4, USB-C போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும், மேலும் இந்த போனில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Realme GT 6T அதிரடியாக 6000ருபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட்