Vivo Y28 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Updated on 08-Jan-2024
HIGHLIGHTS

Vivo தனது Y சீரிஸில் Vivo Y28 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது

Vivo Y27 இன் வாரிசு ஆகும். MediaTek இன் டிமான்சிட்டி 6020 ப்ரோசெசர் Vivo Y28 5G யில் கொண்டுவரப்பட்டுள்ளது

Vivo Y28 5G யின் டாப் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Vivo தனது Y சீரிஸில் Vivo Y28 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு வந்த Vivo Y27 இன் வாரிசு ஆகும். MediaTek இன் டிமான்சிட்டி 6020 ப்ரோசெசர் Vivo Y28 5G யில் கொண்டுவரப்பட்டுள்ளது மற்றும் இது Mali G57 GPU இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. போனில் 6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது, இது 90 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இது 50MP இரட்டை பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதிலிருக்கும் டாப் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Vivo Y28 5G இந்திய விலை தகவல்.

Vivo Y28 5G மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.13,999. 6ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.15,499. 8GB + 128GB வேரியண்டில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.16,999. ஆகும்

Vivo Y28 5G டாப் அம்சங்கல்

டிஸ்ப்ளே

Vivo Y28 5G ஆனது 6.56 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது HD+ ரேசளுசனை வழங்குகிறது, இது 90 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஃபோனில் வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச் உள்ளது,. இதில் பன்ச் ஹோல் கொடுக்கப்பட்டிருக்கும்

ப்ரோசெசர்

இந்த ஃபோனில் MediaTek இன் டிமான்சிட்டி 6020 SoC உள்ளது. 7nm செயல்பாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ப்ரோசெசர் Mali G57 GPU ஐ ஒருங்கிணைத்துள்ளது. இதனுடன், 8 ஜிபி ரேம் வரை வழங்கப்படுகிறது. ரேமை மேலும் 8 ஜிபி வரை அதிகரிக்கலாம்.

ரேம் ஸ்டோரேஜ்

ஃபோனில் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உள்ளது, இதை SD கார்டு வழியாக அதிகரிக்க முடியும். இது Android 13 OS யில் இயங்குகிறது, இதில் Funtouch OS 13 லேயர் உள்ளது.

கேமரா

Vivo Y28 5G ஆனது 50MP ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. போனில் 2எம்பி செகண்டரி கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

இதையும் படிங்க: Infinix Smart 8 ஜனவரி 13 அறிமுகமாகும், iPhone 14 போன்ற அம்சம் இருக்கும்

பேட்டரி

இந்த ஃபோனில் 5 ஆயிரம் எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 15 வாட் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த போனில் ஒரு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது. 3.5மிமீ ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் IP54 ரேட்டிங் கொண்டுள்ளது இதன் எடை 186 கிராம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :