digit zero1 awards

Vivo Y200e யின் 16GB ரேம் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் தகவல் லீக்

Vivo Y200e யின் 16GB ரேம் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் தகவல் லீக்
HIGHLIGHTS

Vivo அதன் Y சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும்

தனது Vivo Y200e 5Gயை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது

Vivo Y200e 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் X இல் ஒரு ட்வீட் மூலம் போனின் முக்கிய சிறப்பம்சங்கள் பகிர்ந்துள்ளார்.

Vivo அதன் Y சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் தனது Vivo Y200e 5Gயை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன் சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளன. நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் அதன் அனைத்து முக்கிய சிறப்பம்சங்களையும் வெளியிட்டுள்ளது. ஃபோனில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்க்ரீன் இருக்கலாம். இதில் 1200 நிட்களின் ப்ரைட்னாஸ் காணலாம். இந்த ஃபோனில் 16 ஜிபி ரேம் வரை வரலாம். வரும் மற்ற சிறப்பம்சங்களை இன்னும் தெளிவாக பார்க்கலாம்.

Vivo Y200e லீக் சிறப்பம்சம்

Vivo Y200e 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் X இல் ஒரு ட்வீட் மூலம் போனின் முக்கிய சிறப்பம்சங்கள் பகிர்ந்துள்ளார். இதன்படி, Vivo Y200e 5G ஃபோன் 6.67 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வரும். இது 120Hz ரெப்ராஸ் ரேட் வீதத்தைக் கொண்டிருக்கும். இது ஒரு AMOLED டிஸ்ப்ளே என்று கூறப்படுகிறது, இதில் 1200 நிட்களின் ப்ரைட்னஸ் காணலாம். தொலைபேசி ஒரு மிட்ரேஞ்ச் சாதனமாக இருக்கலாம்.

இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Snapdragon 4 Gen 2 சிப்செட் வழங்கப்படுகிறது இதன் மூலம் 8ஜிபி ரேம் வரை பார்க்க முடியும். இதை 8ஜிபி வரை நீட்டிக்கவும் முடியும். அதாவது, கிட்டத்தட்ட 16 ஜிபி ரேம் கொண்ட போனாக இருக்கும். சேமிப்பு 128 ஜிபி என்று கூறப்படுகிறது. இது நிறுவனத்தின் FunTouch OS 14 யில் இயங்கும், இது Android 14 ஐ அடிப்படையாகக் கொண்டது.

கேமரா பற்றி பேசுகையில் செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமராவை இந்த போனில் இருக்கும் . இதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா இருக்கும். ப்ரைம் கேமராவுடன், போன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் வரலாம். ஒரு ஃப்ளிக்கர் சென்சார் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பேட்டரி கெப்பாசிட்டி பற்றி பேசினால் 5,000mAh இருக்கலாம் இதை தவிர இதில் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கும் நிறுவனம் சவுண்ட்க்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க முடியும், இதில் 300 சதவீத ஆடியோ பூஸ்டர் சப்போர்டை இரட்டை ஸ்பீக்கர்களுடன் வழங்க முடியும்.

இதையும் படிங்க:400ரூபாய்க்குள் கிடைக்கும் 12 OTT ஆப்கள் மற்றும் 6GB போனஸ் டேட்டா

சாதனத்தின் லெதர் பிளாக் வேரியண்டின் திக்னஸ் 7.79 mm ஆக இருக்கும், அதாவது இது மிகவும் மெலிதான கட்டமைப்புடன் வரும். டைமண்ட் பிளாக் வேரியண்டின் எடை 185 கிராம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், குங்குமப்பூ டிலைட் 191 கிராம் எடையுடன் வரலாம். இந்த போனின் விலை சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo