Vivo இந்திய சந்தையில் Vivo Y200e 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Y200e 5G யில் ஸ்னப்ட்ராக்ன் 4 ஜென் 2 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது விவோவின் Y200e இந்தியாவின் அதிகம் நீடிக்கக்கூடிய Eco-Fiber Leather கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும் இதன் விலை மற்றும் சிறப்ப்ம்சங்களின் தகவலை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
Vivo Y200e 5G இன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.19,999. அதேசமயம் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.20,999.ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Black Diamond மற்றும் Saffron Orange யின் கலரில் கிடைக்கிறது. விவோ இந்தியா வெப்சைட் ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாக இந்தியாவில் ப்ரீ ஆர்டருக்கு Y200e 5G இப்போது கிடைக்கிறது. இது பிப்ரவரி 27 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.
Vivo Y200e 5G ஆனது 6.67-இன்ச் Samsung E4 AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதில் FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெப்ராஸ் ரேட், 394ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1200 nits வரை ஹை ப்ரைட்னாஸ் உள்ளது. இந்த போனில் in ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 4 Gen 2 யில் வேலை செய்கிறது இந்த ஃபோனில் 6ஜிபி / 8ஜிபி LPDDR4x ரேம் உள்ளது, இதை விர்ச்சுவல் ரேம் மூலம் 8ஜிபி வரை அதிகரிக்க முடியும். இதில் 128ஜிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
கேமரா செட்டப் பற்றி பேசுகையில், Vivo Y200e 5G முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், அதன் பின்புறம் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் பொக்கே லென்ஸ் மற்றும் ஃப்ளிக்கர் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த போனில் பேட்டரிக்கு 5,000mAh உடன் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் டுயள் ஸ்பீக்கர் கொண்டுள்ளது
இதையும் படிங்க:Loksabha Election 2024: வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் Voter ID Card எப்படி Apply செய்வது?
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FunTouch OS 14 இல் வேலை செய்கிறது. இணைப்பு விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். தொலைபேசி IP54 மதிப்பீட்டுடன் வருகிறது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டன்ட் பாதுகாப்பை உறுதி செய்கிறது. டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 163.1, அகலம் 75.81, திக்னஸ் 7.79 mm மற்றும் எடை 191 கிராம் ஆகும் .