Vivo யின் அசத்தலான போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Updated on 21-May-2024

Vivo Y200 Pro 5G இன்று இந்தியாவில் அதன் போனை அறிமுகம் செய்தது, Vivo Y200 Pro 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் Y-சீரிஸை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டில் வளைந்த காட்சியுடன் வரும் முதல் Y-சீரிஸ் போன் ஆகும். Vivo Y200 Pro 5G ஆனது Qualcomm ப்ரோசெசர் மற்றும் 8GB RAM உடன் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Vivo ஃபோனைப் பற்றிய அனைத்து முக்கிய விஷயங்களையும், அதன் விலை முதல் விற்பனை விவரங்கள் பார்க்கலாம்

Vivo Y200 Pro 5G: விலை மற்றும் விற்பனை தகவல்.

Vivo வழங்கும் இந்த புதிய போன் 8GB + 128GB ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது மற்றும் இதன் விலை ரூ.24,999 ஆகும். இது தற்போது Vivo eStore யில் வாங்குவதற்கு கிடைக்கிறது.சில்க் க்ரீன் மற்றும் சில்க் பிளாக் வண்ண வகைகளில் வாங்கலாம். இது தவிர, SBI, IDFC First, IndusInd போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளில் சிறப்பு சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது. இப்போது வாங்கும் போது, ​​வாடிக்கையாளர்களுக்கு பிளாட் ரூ.2500 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படும்.

Vivo Y200 Pro 5G hua bharat mein launch dekhen top features aur price

Vivo Y200 Pro 5G: Top Features

டிசைன்

Vivo Y200 Pro புத்தம் புதிய சில்க் கிளாஸ் டிசைனுடன் வருகிறது மற்றும் சில்க் கிரீன் மற்றும் சில்க் பிளாக் கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. இது ஒரு 3D கர்வ்ட் டிச்ப்லேவை வழங்குகிறது மற்றும் அதன் விலை பிரிவில் மெல்லிய கர்வ்ட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனிற்கு IP54 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது, இது வாட்டர் ச்ப்லாட்டார் மற்றும் டஸ்ட் துகள்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

டிஸ்ப்ளே

இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் முழு HD+ (2400 x 1080) பிக்சல் ரேசளுசன் 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் 80,00,000: 1 மாறுபட்ட ரேசியோ மற்றும் 105% NSTC கலர் ரேன்ஜ் தவிர, செல்ஃபி கேமராவிற்காக இந்த பேனலில் சென்டர் பஞ்ச் ஹோல் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.

Vivo Y200 Pro Features

பர்போமான்ஸ்

பர்போமான்ஸ் பற்றி பேசினால், , இதற்காக நிறுவனம் புதிய Y200 ப்ரோவில் Qualcomm Snapdragon 695 ப்ரோசெசரை இன்ஸ்டால் செய்துள்ளது இது Adreno 619 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. தவிர, இது 8GB LPDDR4X ரேம், 8GB நீட்டிக்கப்பட்ட ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் சப்போர்ட் எய்யப்படுகின்றன இந்த மொபைலில் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

சாப்ட்வேர்

இந்த போனின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால், இப்பொழுது இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 14 யில் தொடங்கப்பட்டது.

கேமரா

இதன் கேமரா பற்றி பேசினால், இதன் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை கேமரா அமைப்பில் 2x போர்ட்ரெய்ட் கொண்ட 64MP கேமரா உள்ளது, இது f/1.79 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் பொருத்தப்பட்டுள்ளது, இரண்டாவது கேமரா f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2MP பொக்கே சென்சார் ஆகும். முன் கேமராவைப் பற்றி பேசுகையில், f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

Vivo Y200 Pro 5G launched

பேட்டரி

Vivo Y200 Pro ஐ பேட்டரி பவருக்காக இந்த போனில் நிறுவனம் 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது இது 1600 சார்ஜிங் சைக்கிளுடன் வருகிறது. இந்த ஃபோன் USB Type-C சார்ஜிங் போர்ட் வழியாக 44W FlashCharge ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . 28 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு

கனேக்டிவிட்டிக்கு இந்த போனில் இரட்டை சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி, IPS க்ளோனாஸ், கலிலியோ, பெய்டூ மற்றும் நாவிக் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது இது தவிர, இந்த போனில் பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Infinix GT 20 Pro அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் என்ன பக்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :