Vivo வெறும் 7,999ரூபாயில் பிரமாதமான போனை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது

Updated on 28-Aug-2024
HIGHLIGHTS

Vivo Y18 மற்றும் Y18e ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

இப்போது இந்த சீரிஸின் மற்றொரு குறைந்த விலை மாடல் Vivo Y18i அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

வெறும் ரூ.7,999க்கு கிடைக்கிறது இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Vivo Y18 மற்றும் Y18e ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இப்போது இந்த சீரிஸின் மற்றொரு குறைந்த விலை மாடல் Vivo Y18i அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வெறும் ரூ.7,999க்கு கிடைக்கிறது இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Vivo Y18i யின் விலை

Vivo Y18i ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அதாவது ரூ.7,999 மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்களைத் தவிர, இந்த ஃபோனை Vivo இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் வாங்கலாம். இந்த போன் ஜெம் கிரீன் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரீடெய்ல் ஸ்டோர்களிலும் இந்த விலை மற்றும் இந்த வண்ண மாடல்களுடன் இந்த போனை நீங்கள் வாங்கலாம்.

Vivo Y18i டாப் சிறப்பம்சம்

டிஸ்ப்ளே : Vivo Y18i ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உள்ளது, இது 90Hz ரெப்ரஸ் ரேட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. போனின் டிஸ்பிளேயின் வெளிச்சம் 528 நிட்கள். வழங்குகிறது

ப்ரோசெசர் : இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் இதில் லேட்டஸ்ட் Unisoc T612 சிப்செட் வழங்கப்படுகிறது , மேலும் இந்த போனில் 4 ஜிபி ரேம் உடன், போனில் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, மேலும் நீங்கள் விவோ ஃபோனின் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்.

கேமரா : Vivo Y18i ஐ கேமராவைப் பொறுத்தவரை நல்ல போன் என்று அழைக்கலாம், ஏனெனில் இந்த போனில் குறைந்த விலையில் நல்ல கேமரா உள்ளது. Vivo Y18i 13MP யில் ப்ரைம் கேமராவைக் கொண்டுள்ளது, இது தவிர, மற்றொரு 0.08MP கேமராவும் போனில் கிடைக்கிறது. செல்ஃபி போன்றவற்றிற்காக இந்த போனில் 5MP செல்ஃபி கேமரா உள்ளது

பேட்டரி : Vivo ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரியும் உள்ளது, இந்த போனில் நல்ல சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஒப்பரேட்டிங் சிஸ்டம் : இந்த Vivo மொபைல் போன் FunTouchOS 14 ஸ்கின் மற்றும் ஆண்ட்ராய்டு 14 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Vivo Y18i வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிச்டண்டிர்க்கான IP54 ரெட்டிங்குடன் வருகிறது. இதில் WiFi, Bluetooth, 4G நெட்வொர்க் வசதி உள்ளது.

இதையும் படிங்க Vivo T3 Pro 5G போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்களை பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :