Vivo Y17s போன்11,499 விலையில் அறிமுகம் இதன் டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க

Updated on 03-Oct-2023
HIGHLIGHTS

விவோ தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Vivo Y17sகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo Y17s HD Plus டிஸ்ப்ளே, 5000 mAh பெரிய பேட்டரி கொண்டுள்ளது

இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.11,499 மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.12,499.ஆகும்.

சீன போன் தயாரிப்பாளரான விவோ தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Vivo Y17sகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. நிறுவனம் ஒவ்வொரு விலை வகையிலும் ஒன்றன் பின் ஒன்றாக சாதனங்களை அறிமுகப்படுத்தி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தி வருகிறது. Vivo Y17s HD Plus டிஸ்ப்ளே, 5000 mAh பெரிய பேட்டரி. இந்த ஃபோன் 4 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

Vivo Y17s விலை மற்றும் விற்பனை

Vivo Y17s ஒரு மிட் ரேன்ஜ் போநகும் இது கிளிட்டர் பர்பில் மற்றும் மிஸ்டிக் கிரீன் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவோ இ-ஸ்டோரிலிருந்து போனை வாங்கலாம். இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.11,499 மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.12,499.ஆகும்.

Vivo Y17s

Vivo Y17s சிறப்பம்சம்

டிஸ்ப்ளே

Vivo Y17s ஆனது 6.56 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 720 x 1612 பிக்சல்கள் HD+ ரேசளுசன் வழங்குகிறது. டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்தையும் 840 நைட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

கேமரா

Vivo Y17s 50 மெகாபிக்சல் ப்ரைம் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. 2 மெகாபிக்சல் பொக்கே லென்ஸும் உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ப்ரோசெசர்

Y17s யில் MediaTek இன் Helio G85 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, Y17s ஆனது ஆண்ட்ராய்டு 13 OS யில் இயங்குகிறது, இது நிறுவனத்தின் Funtouch OS 13 உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரேம் ஸ்டோரேஜ்

இதில் 4 GB LPDDR4x ரேம் மற்றும் 128GB வரையிலான இந்த்டேனால் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இதை SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம்.

பேட்டரி

Y17s யில் 5,000mAh கொண்ட பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இது 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது

கனெக்டிவிட்டி

மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், போனில் டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, GPS யுஎஸ்பி-சி போர்ட், 3.5 mm ஆடியோ ஜாக் உள்ளது. இது 5ஜி ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும். நீங்கள் 5G சாதனத்தை வாங்க விரும்பினால், இந்த விலையில் மற்ற விருப்பங்களைப் பார்க்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :