சத்தமில்லாமல் Vivo Y12 4G அறிமுகம்,12GB ரேம் கொண்டிருக்கும்

Updated on 24-Nov-2023
HIGHLIGHTS

மாடல் எண் V2317A கொண்ட Vivo ஃபோன் சமீபத்தில் சீனாவின் TENNA அதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

Vivo Y12 4G என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய போனின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

மாடல் எண் V2317A கொண்ட Vivo ஃபோன் சமீபத்தில் சீனாவின் TENNA அதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த பட்டியல் மூலம், போனில் படத்துடன், அதன் அனைத்து சிறப்ப்ம்சங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டன. இப்போது இறுதியாக இந்த போனின் Vivo Y12 4G என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய போனின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Vivo Y12 Price

Y12 மாடலின் விலை 999 யுவான் (தோராயமாக ரூ. 11,900) மற்றும் Wild Green மற்றும் Crystal Purple ஆகிய இரண்டு நிற விருப்பங்களில் கிடைக்கிறது.

Vivo Y12 price

விவோ Y12 4G Specs, Features

Vivo Y12 ஸ்மார்ட்போன் 720 x 1612 பிக்சல்கள் HD+ ரேசளுசனை வழங்கும் 6.56-இன்ச் LCD வாட்டர் டிராப்-நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போனில் 6GB LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்ட 28GB eMMC 5.1 ஸ் டோரேஜை வழங்குகிறது. மேலும் இதை மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக அதிகரிக்க முடியும் இதன் உடன் MediaTek Helio G85 சிப் மூலம் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க : Redmi Note 13R Pro அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க

இமேஜிங் திறனைப் பற்றி பேசுகையில், இந்த ஃபோனில் இரட்டை பின்புற கேமரா செட்டிங் உள்ளது, இதில் 13MP முதன்மை லென்ஸ், 2MP டெப்த் சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவை அடங்கும். இது தவிர, செல்ஃபி மற்றும் வீடியோ காளிற்காக 8எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. இதன் செக்யூரிட்டி அம்சங்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவை அடங்கும்.

Vivo Y12

விவோவின் இந்த புதிய போனில் 15W சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, இது USB-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட Origin OS 3 உடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் பரிமாணங்கள் 163.74 x 75.43 x 8.09 mm மற்றும் எடை 186 கிராம் ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :