விவோ சீன சந்தையில் புதிய Y100-சீரிஸ் ஸ்மார்ட்போனான Vivo Y100i Power ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ Y100i பவர் 6.64 இன்ச் முழு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. விவோ Y100i பவர் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. இந்த விவோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள், விலை போன்றவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் கூறுகிறோம்.
விலையைப் பற்றி பேசினால், விவோ Y100i Power yin விலை 2,099 யுவான் (சுமார் ரூ. 24,535). இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் நீல நிற விருப்பங்களில் கிடைக்கிறது.
Vivo Y100i Power ஆனது 6.64 இன்ச் முழு HD + IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதன் தீர்மானம் 1080 x 2388 பிக்சல்கள் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது
இந்த போனில் Snapdragon 6 Gen 1 ப்ரோசெசர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Origin OS 3 யில் வேலை செய்கிறது.
இதில் 6,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இந்த ஃபோனில் 12GB LPDDR4x ரேம் மற்றும் 512GB UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. விர்ச்சுவல் ரேம் மூலம் 12ஜிபி வரை ரேமை அதிகரிக்கும்..
கேமரா செட்டப் பொறுத்தவரை, விவோ Y100i பவர் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
கனேக்ட்டிவிட்டி விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், இந்த விவோ ஸ்மார்ட்போனின் நீளம் 164.64 mm அகலம் 75.8 mm திக்னஸ் 9.1 mm மற்றும் எடை 199.6 கிராம் ஆகும்
இதையும் படிங்க: Vi Annual Plan: Vi யின் இந்த வருடாந்திர திட்டத்தில் கிடைக்கும் OTT உட்பட பல நன்மை
இதன் வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த போனில் 639mm2 லிக்யுட் கூலிங் ஹீட் பைப் மற்றும் 8736mm கிராபைட் ஷாட் கொண்டுள்ளது.