Vivo Y02 ஸ்மார்ட்போன் ரூ, 8900 விலையில் அறிமுகம்.

Updated on 20-Mar-2023
HIGHLIGHTS

விவோ தனது குறைந்த விலை போனான Vivo Y02 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

Vivo Y02 5000mAh பேட்டரி மற்றும் 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் உடன் வருகிறது

ஆர்க்கிட் ப்ளூ மற்றும் காஸ்மிக் கிரே வண்ண விருப்பங்கள் Vivo Y02 உடன் கிடைக்கும்

ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ தனது குறைந்த விலை போனான Vivo Y02 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் இந்தியாவிற்கு முன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Vivo Y02 5000mAh பேட்டரி மற்றும் 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் உடன் வருகிறது. விவோவின் இந்த மலிவான போனில், 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கிறது. Vivo Y02 ஆனது octa-core செயலியின் ஆதரவைக் கொண்டுள்ளது. 

Vivo Y02 யின் விலை

ஆர்க்கிட் ப்ளூ மற்றும் காஸ்மிக் கிரே வண்ண விருப்பங்கள் Vivo Y02 உடன் கிடைக்கும். போனின் 3 ஜிபி ரேம் கொண்ட 32 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.8,999. விவோ இ-ஸ்டோரில் போனை வாங்கலாம்.

Vivo Y02 யின் சிறப்பம்சம்

Android 12 (Go Edition) அடிப்படையிலான Funtouch OS 12 Vivo Y02 உடன் கிடைக்கிறது. Vivo Y02 ஆனது 6.51-இன்ச் HD பிளஸ் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது (720×1600) பிக்சல் ரெஸலுசன் மற்றும் 20: 9 ரேஸியோவுடன் வருகிறது. டிஸ்பிளேவுடன் கண் ப்ரொடெக்சன் முறை ஆதரிக்கப்படுகிறது. ஆக்டா-கோர் மீடியாடெக் செயலி மற்றும் 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி வரை உள் சேமிப்பிற்கான ஆதரவை இந்த ஃபோன் கொண்டுள்ளது. இருப்பினும், மைக்ரோ SD கார்டின் உதவியுடன் ஸ்டோரேஜை 1 TB வரை அதிகரிக்க முடியும்.

Vivo Y02 உடன், உலகளாவிய வேரியண்ட்டை போலவே ஒற்றை கேமரா அமைப்பு கிடைக்கிறது, இதில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவுடன் LED ஃபிளாஷ் லைட் துணைபுரிகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் உள்ளது.

Vivoவின் புதிய ஃபோனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 10-வாட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. தொலைபேசியில் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது. தொலைபேசியில் இணைப்புக்காக, இரட்டை சிம் ஆதரவு, 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் ஆதரவு 3.5mm  ஆடியோ ஜாக் உடன் கிடைக்கிறது. போனின் எடை 186 கிராம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :