Vivo X21 இன் ஸ்கிறீன் பிங்கர்பிரிண்ட் சென்சாருடன் இந்தியாவில் அறிமுகமானது

Vivo X21  இன் ஸ்கிறீன் பிங்கர்பிரிண்ட் சென்சாருடன் இந்தியாவில் அறிமுகமானது
HIGHLIGHTS

Vivo X21 35,999 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது மற்றும் இது இன்று பிளிப்கார்ட் மற்றும் Vivo ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த சாதனத்தின் விற்பனை அறம்பாகியுள்ளது

விவோ இந்தியா ஏற்கனவே அறிவித்ததை போன்று இந்தியாவில் விவோ X21 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 

இன்று Vivo  அதன் ப்ளாக்ஷிப்  ஸ்மார்ட்போன் X21  இந்தியாவில் அறிமுகம் செய்தது இதன் மிக பெரிய விஷயம் என்னவென்றால் இதில் டிஸ்பிலேவுக்கு கீழ் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இருக்குது மற்றும் Vivo X21 35,999ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும்  இன்று இது பிளிப்கார்ட் மற்றும் Vivo  ஒன்லைன் ஸ்டோர்களில்  விற்பனை ஆரம்பம் ஆகியுள்ளது 

இந்தியாவின் முதல் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனாக விவோ X21 இருக்கிறது. முன்னதாக சீனாவில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் அறிமுகமாக விவோ X21 இன்-டிஸ்ப்ளே கைரைகே சென்சார் தொழில்நுட்பம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது.

புதிய விவோ X21 ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் FHD பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90.3% ஸ்கிரீன் அளவு, 1.66 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. 3D கிளாஸ் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருப்பதால் கைககளில் பயன்படுத்த சிறப்பான அனுபவம் வழங்குகிறது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.0 மற்றும் குவால்காம் மூலம் இயங்கும் செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. டூயல் பிரைமரி கேமரா, சாம்சங் 2L9 சென்சார், டூயல் பிக்சல் தொழில்நுட்பம், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் அதிநவீன டூயல் பிக்சல் கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழி்ல்நுட்பம் பயன்படுத்தி குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை வழங்குகிறது. இது அதிகபட்சம் 24 எம்.பி. தரமுள்ள புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ X21 சிறப்பம்சங்கள்:

– 6.28 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo