Vivo X200 சீரிஸ் இந்தியாவில் 200MP கேமரா உடன் அறிமுகம்

Vivo X200 சீரிஸ் இந்தியாவில் 200MP கேமரா உடன் அறிமுகம்
HIGHLIGHTS

Vivo தனது ப்ளாக்ஷிப் Vivo X200 சீரிசை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சீரிஸ் , நிறுவனம் Vivo X200 மற்றும் Vivo X200 Pro ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Funtouch OS 15 யில் வேலை செய்கின்றன

Vivo தனது ப்ளாக்ஷிப் Vivo X200 சீரிசை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இந்த சீரிஸ் , நிறுவனம் Vivo X200 மற்றும் Vivo X200 Pro ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் டாப்-ஆஃப்-லைன் கேமராக்களுடன் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் நல்ல பர்பொம்ன்சுடன் இருக்கிறது, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் MediaTek Dimension 9400 செயலி உள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Funtouch OS 15 யில் வேலை செய்கின்றன. மேலும் தற்பொழுது இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவலை பார்க்கலாம்.

Vivo X200 சீரிஸ் விலை

இந்தியாவில் வெண்ணிலா விவோ எக்ஸ்200 ப்ரோவின் விலை ரூ.94,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த விலையில், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு வழங்கப்படும். Vivo X200 இன் விலை 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.71,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்தின் விலை ரூ.65,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த போன்களின் விற்பனை டிசம்பர் 19 முதல் தொடங்கும். அதேசமயம் இந்த போன்கள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

Vivo X200 Pro சிறப்பம்சம்

Vivo X200 Pro கிளாஸ் முன்புறம் மற்றும் கிளாஸ் பின்புறம் அலுமினிய பிரேமுடன் உள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டார் பாதுகாப்பிற்கான IP69 ரேட்டிங்குடன் வருகிறது. டிஸ்ப்லேவை பொறுத்தவரை, இது 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.78-இன்ச் LTPO AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இதில் நீங்கள் HDR10+ மற்றும் Dolby Vision சப்போர்டையும் 4500 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் வழங்குகிறது.

கேமராக்களுக்கு, 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட Zeiss-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் கேமரா அமைப்பைப் பெறுகிறோம்.

இந்த போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியைப் பற்றி பேசுகையில், X200 ப்ரோ 90-வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6000mAh பேட்டரி மற்றும் 30-வாட் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டை கொண்டுள்ளது.

Vivo X200 யின் சிறப்பம்சம்

Vivo X200 அதன் பெரிய சகோதரரை விட சற்று சிறியது. டிசைனை பொறுத்தவரை, இது ஒரு கிளாஸ் முன் மற்றும் கிளாஸ் பின்புறம் அலுமினிய பிரேமுடன் உள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிஸ்டண்டிர்க்கான IP69 ரெட்டின்குடன் வருகிறது. டிஸ்ப்ளே பற்றி பேசுகயில் ,இதில் 6.67-இன்ச் AMOLED ஸ்க்ரீனை 120Hz ரெப்ராஸ் ரேட், HDR10+ சப்போர்ட் மற்றும் 4500 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

போட்டோக்ரபி பற்றி பேசுகையில், இது ஜெய்ஸ்-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா, 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரும் உள்ளது. இந்த போனில் 90-வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5800mAh பேட்டரியைப் வழங்குகிறது.

இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான Funtouch OS 15 யில் இயங்குகின்றன இந்த இரண்டு போன்களிலும் 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு சாப்ட்வேர் அப்டேட்களை வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இரண்டு போன்களிலும் டைமன்சிட்டி 9400 சிப்செட் உள்ளது.

இதையும் படிங்க: Motorola யின் இந்த போனில் அதிரடியாக 7000 வரை டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo