Vivo X200 series இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும், எப்போன்னு பாருங்க

Updated on 17-Oct-2024
HIGHLIGHTS

Vivo அதன் Vivo X200 series சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த வரிசையின் கீழ் Vivo X200, X200 Pro மற்றும் X200 Pro Mini ஆகியவை அடங்கியுள்ளது

இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும்

Vivo அதன் Vivo X200 series சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இப்பொழுது இது விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த வரிசையின் கீழ் Vivo X200, X200 Pro மற்றும் X200 Pro Mini ஆகியவை அடங்கியுள்ளது மேலும் இந்த போன் இந்த ஆண்டு டிசம்பர் 2024க்குள் அறிமுகமாகும்.

Vivo X200 series எப்பொழுது அறிமுகமாகும்

91மொபைல்ஸ் அறிக்கையின்படி, புதிய வரிசை இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் Vivo X100 மற்றும் Vivo X100Pro அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த போனின் வரிசையில் அடுத்ததாக உள்ளன.

Vivo X200 series யின் எதிர்ப்பார்க்கபடும் அம்சம்.

Vivo X200 series அம்சம் பற்றி பேசினால், இதில் 6.67-இன்ச் OLED ஸ்க்ரீன் அதுவே X200 Pro யில் பெரிய 6.78-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இந்த இருபோனிலும் 1.5K ரெசளுசன் சப்போர்டுடன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் பீக் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது மேலும் இதில் 4500 வரையிலான 4500நிட்ஸ் இருக்கும் X200 Pro Mini யில் 6.3-இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் அதே 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது

மேலும் இந்த மூன்று மாடலிலும் MediaTek’s Dimensity 9400 சிப்செட்டுடன் 16GB of RAM மற்றும் 1TB வரையிலான அதிகரிக்ககூடிய ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் இது Vivo யின் லேட்டஸ்ட் ஒரிஜின் OS 5, சர்கிள் அம்சம் மூலம் சர்ச் செய்யப்படும்.

இதன் கேமரா பற்றி பேசினால், Vivo X200 Pro உடன் 50-மேகபிக்சல் LYT-818 மெயின் சென்சாருடன் 50-மேகபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 200 மெகாபிக்சல் Zeiss APO டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது, vanilla Vivo X200 யில் ஒரு 50-மெகாபிக்சல் Sony IMX921 மெயின் சென்சார், ஒரு 50-மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது இதன் அடுத்த X100 Pro Mini யில் 50-மெகாபிக்சல் LYT-818 மெயின் சென்சாருடன், 50-மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த மூன்று போனிலும் செல்பிக்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது.

Vivo X200 யில் 5,800mAh பேட்டரி Pro வெர்சனில் 6,000mAh பேட்டரி கெப்பாசிட்டி மற்றும் X200 Pro Mini யில் 5,700mAh பேட்டரி வழங்கப்படுகிறது, மேலும் இதன் அனைத்து மாடலிலும் 90-watt பாஸ்ட் சார்ஜிங் மற்றும் Pro Mini யில் 50-watt வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Realme P1 Speed 5G போன் அறிமுகம் மேலும் அறிமுக சலுகையாக 2000 டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :