Vivo X100 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம், 16GB ரேம் கொண்டிருக்கும்

Updated on 04-Jan-2024
HIGHLIGHTS

Vivo அதன் மிகவும் விலை உயர்ந்த மற்றும் ப்லாக்ஷிப் சீரிஸான Vivo X100 இந்தியாவில் அறிமுகமானது,

ம் Vivo X100 Pro மற்றும் X100 என்ற பெயரில் 16 GB ரேம் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ZEISS உடன் இணைந்து கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன

Vivo அதன் மிகவும் விலை உயர்ந்த மற்றும் ப்லாக்ஷிப் சீரிஸான Vivo X100 இந்தியாவில் அறிமுகமானது, நிறுவனம் Vivo X100 Pro மற்றும் X100 என்ற பெயரில் 16 GB ரேம் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் ZEISS உடன் இணைந்து கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் பயனர்கள் புதிய அளவிலான போட்டோவை அனுபவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. புதிய Vivo ஃபோன்கள் 100x வரை ஜூம் கேப்சர் செய்ய முடியும். டெலிஃபோட்டோ சன்ஷாட் ஒரு பெரிய அம்சமாக விவரிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் படங்களை எடுக்க முடியும்.

இந்தியாவில் விவோ எக்ஸ்100 ப்ரோ மற்றும் எக்ஸ்100 ஆகியவை மீடியா டெக்கின் டைமென்சிட்டி 9300 ப்ரோசெசர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்கள் என்று நிறுவனம் கூறுகிறது.

Vivo X100 சீரிஸின் விலை மற்றும் விற்பனை தகவல்.

Vivo X100 Pro யின் 16GB+512GB ஸ்ர்டோறேஜ் கொண்ட போனை வாங்கலாம், இதன் விலை 89,999 ரூபாயாகும். Vivo X100 யின் ஆரம்ப விலை 12GB+256GB மாடல் 63,999 ரூபாயாகும்

Vivo X100 price

இதன் 16ஜிபி + 512ஜிபி வகையின் விலை ரூ.69,999. இரண்டு சாதனங்களும் 24 மாதங்களுக்கு விலையில்லா EMI இல் பெறலாம். பூஜ்ஜிய முன்பணம் செலுத்தும் விருப்பமும் உள்ளது. ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் உடனடி கேஷ்பேக் கிடைக்கும். HDFC மற்றும் SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் EMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடி மற்றும் இதே போன்ற தள்ளுபடி கிடைக்கும். இரண்டு போன்களும் முன்பதிவுக்குக் கிடைக்கின்றன மற்றும் ஜனவரி 11 முதல் விற்பனைக்கு வரும்.

X100 Pro மற்றும் X100 சிறப்பம்சம்

டூயல் சிம் (நானோ) ஸ்லாட்டுகளுடன் வரும் Vivo X100 Pro ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் இயங்குகிறது. இது 6.78-இன்ச் AMOLED 8T LTPO வளைந்த டிஸ்ப்ளே மற்றும் 3000nits இன் ஹை ப்ரைட்னாஸ் மற்றும் 120Hz வரை புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது MediaTek இன் Dimensity 9300 செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் Vivoவின் புதிய V3 இமேஜிங் சிப்பும் பொருத்தப்பட்டுள்ளது. ஃபோனில் 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் G720 GPU உள்ளது.

Vivo X100 Pro டிஸ்ப்ளே

Vivo X100 Pro யில் Zeiss யின் ப்ரேண்டிங் கொண்ட ட்ரிப்பில் பின் கேமரா கொண்டுள்ளது, மெயின் சென்சார் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி IMX989 1-இன்ச் சென்சார் ஆகும். இதனுடன், 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. டெலிஃபோட்டோ கேமரா 4.3x ஆப்டிகல் ஜூம் வரை ஆதரிக்கிறது. முதன்மை ஷூட்டர் மற்றும் டெலிஃபோட்டோ கேமரா இரண்டும் 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்குகின்றன. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ சேட்க்காக 32எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

Vivo X100 Pro ஆனது 512GB வரை UFS 4.0 உள்ளடங்கிய ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS, NavIC, OTG மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றிற்கான சப்போர்ட் அடங்கும். போன் IP68 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Vivo X100 Pro 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டை கொண்டுள்ளது. 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உள்ளது. போனில் 5,400mAh பேட்டரி உள்ளது. இதன் எடை 225 கிராம்.

Vivo X100 பற்றி பேசினால் இதன் சிம் சாப்ட்வேர் சிம், சாப்ட்வேர் டிஸ்ப்ளே அம்சம் Vivo X100 Pro போலவே இருக்கிறது, MediaTek இன் Dimensity 9300 ப்ரோசெசர் 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் விவோவின் இமேஜிங் சிப் V2 உடன் வழங்கப்படுகிறது.

#Vivo X100 Pro ப்ரோசெசர்

X100 ஆனது Zeiss பிராண்டிங்குடன் மூன்று பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. ஃபோனில் 50-மெகாபிக்சல் முதன்மை Sony IMX920 VCS கேமரா OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 100x ஜூம் கொண்ட 64-மெகாபிக்சல் சூப்பர்-டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி கேமரா 32 மெகாபிக்சல்கள் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Tecno Pop 8 வெறும் 6000 ரூபாயில் அறிமுகம் இதன் டாப் அம்சம் தெருஞ்சிகொங்க

Vivo X100 Pro கேமரா

இந்த போனில் IP68 ரேட்டிங் கிடைக்கிறது, 5,000mAh பேட்டரி உள்ளது, இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. X100 202 கிராம் எடை கொண்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :