Vivo X100, Vivo X100 Pro உலகளவில் அடுத்த வாரம் அறிமுகமாகும்

Vivo X100, Vivo X100 Pro உலகளவில் அடுத்த வாரம் அறிமுகமாகும்
HIGHLIGHTS

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோவின் X100 சீரிஸ் அடுத்த வாரம் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த உள்ளது

சீனாவில் இந்த சீரிச்ன் Vivo X100 மற்றும் X100 Pro ஐ அறிமுகப்படுத்தியது

Vivo X100 மற்றும் X100 Pro ஆகியவை டிசம்பர் 14-ம் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோவின் X100 சீரிஸ் அடுத்த வாரம் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த உள்ளது நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் இந்த சீரிச்ன் Vivo X100 மற்றும் X100 Pro ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்கள் MediaTek யின் Dimensity 9300 சிப்செட் மற்றும் மூன்று பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளன.

Vivo X100 மற்றும் X100 Pro ஆகியவை டிசம்பர் 14-ம் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த தகவல் அந்நிறுவனத்தின் இன்டர்நெட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் வெளியிடப்படலாம். இந்தத் சீரிச்ன் அடிப்படை மாடலான X100, சீனாவில் உள்ள வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

Vivo X100, Vivo X100 Pro எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.79 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே 120 ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது ஏழு நாட்களில் X100 யின் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களுக்கான ப்ரீ ஆர்டர்களை நிறுவனம் பெற்றுள்ளது. எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு இவ்வளவு பெரிய அளவிலான ப்ரீ ஆர்டர்களைப் பெறுவது நிறுவனத்திற்கு இதுவே முதல் முறை.

இந்த ஸ்மார்ட்போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 9300 LPDDR5T RAM மற்றும் UFS 4.0 யின் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, X100 ஆனது 50-மெகாபிக்சல் சோனி IMX920 கேமரா, 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Vivo X100 Pro யின் பெரும்பாலான சிறப்பம்சங்கள் X100 ஐப் போலவே உள்ளன. இருப்பினும், இது 50-மெகாபிக்சல் கஷ்டமைஸ் Sony IMX989 VCS பயோனிக் சென்சார் கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, அடிப்படை மாதிரியின் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ மேக்ரோ லென்ஸுக்கு பதிலாக, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் 5,400 mAh பேட்டரி 100 W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க: Jio வின் குறைந்த விலை திட்டத்தில் 3மாதங்கள் வரை FREE Disney+ Hotstar கிடைக்கும்

சமீபத்தில் டிப்ஸ்டர் படி Digital Chat Station யின் ஒரு போஸ்டில் நிறுவனம் விரைவில் X100 Pro+ ஐ அறிமுகப்படுத்தலாம். Qualcomm யின் Snapdragon 8 Gen 3 SoC ப்ரோசெசராக இதில் கொடுக்கப்படலாம். கடந்த ஆண்டு, நிறுவனம் X90 சீரிஸின் Vivo X90, X90 Pro மற்றும் X90 Pro+ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. முன்னதாக சில லீக்களில் Vivo X100 Pro+ ஆனது 120 Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.78 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இது 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 50 மெகாபிக்சல் சோனி IMX989 சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் சோனி IMX758 போர்ட்ரெய்ட் சென்சார் ஆகியவற்றைப் பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo