Vivo X Fold 3 Pro யின் கண்ணை கவரும் புதிய கலர் வேரியண்ட் அறிமுகம்
Vivo X Fold 3 Pro இந்தியாவில் புதிய கலர் வேரியண்ட் அறிமுகம் செய்துள்ளது
இந்த போனின் Lunar White கலர் வேரியண்டில் அறிமுகம்
Vivo X Fold 3 Pro Lunar White எடிசனை இது 16 ஜிபி ரேம் + 512 ஜிபி வரும் இதை ரூ 1,59,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
Vivo X Fold 3 Pro இந்தியாவில் புதிய கலர் வேரியண்ட் அறிமுகம் செய்துள்ளது அதாவது இந்த போனின் Lunar White கலர் வேரியண்டில் அறிமுகம். இந்த போனில் Snapdragon 8 Gen 3 SoC ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனிலிருக்கும் பல சுவாரஸ்ய அம்சம் மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க
Vivo X Fold 3 Pro Lunar White இந்திய விலை
நிறுவனம் இந்தியாவில் Vivo X Fold 3 Pro Lunar White எடிசனை இது 16 ஜிபி ரேம் + 512 ஜிபி வரும் இதை ரூ 1,59,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னதாக நிறுவனம் செலஸ்டியல் பிளாக் நிறத்தில் போனை அறிமுகப்படுத்தியது, அது இன்னும் கிடைக்கும். ஆனால் இப்போது பயனர்கள் போனை இரண்டு கலர்களில் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
.Vivo X Fold 3 Pro Lunar White Vivo India வெப்சைட் தவிர Amazon, Flipkart யிலும் வாங்கலாம் மேலும் இதை நீங்கள் ரீடைலர் கடைகளிலும் வாங்கலாம், நிறுவனம் மேலும் இது மாதத்திற்கு ரூ.6,666 நோ கோஸ்ட் EMI விருப்பத்தையும் வழங்குகிறது. அதே நேரத்தில், HDFC பேங்க் , SBI பேங்க் , DBS பேங்க் மற்றும் IDFC முதல் பேங்க் கார்டுகளின் மூலம் இன்ஸ்டன்ட் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Vivo X Fold 3 Pro Lunar White சிறப்பம்சம்.
Vivo X Fold 3 Pro யில் 8.03 இன்ச் E7 AMOLED பிரைமரி டிஸ்பிளே வழங்கப்படுகிறது, இது 2K ரெஸலுசன் , 4,500 nits ஹை ப்ரைட்னஸ் Dolby Vision சப்போர்ட் மற்றும் HDR10 சப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் 6.53 இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே உள்ளது. போன் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் வேலை செய்கிறது.
Vivo X Fold 3 Pro ஆனது octa core Snapdragon 8 Gen 3 ப்ரோசெசரை கொண்டுள்ளது. இதில் 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி யுஎஃப்எஸ்4.0 உள்ளடங்கிய சேமிப்பு உள்ளது. இதில் கார்பன் ஃபைபர் கீலை நிறுவனம் வழங்கியுள்ளது. விவோவின் வி3 இமேஜிங் சிப்பும் போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Vivo X Fold 3 Pro யில் Zeiss சப்போர்ட் கொண்ட ட்ரிப்பில் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் கனெக்டிவிட்டி விருப்பங்களில், Vivo ஃபோனில் 5G, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS, BeiDou, GLONASS, Galileo, QZSS, NavIC, A-GPS, OTG மற்றும் USB Type C போர்ட் உள்ளது. இந்த Vivo ஃபோனில் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டன் 5,700mAh பேட்டரி உள்ளது.
இதையும் படிங்க Amazon Sale கீழ் இந்த போன்களில் அதிரடி டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile