digit zero1 awards

Vivo X Fold 3 Pro அறிமுகத்திற்க்கு முன்னே Flipkart யில் டீசர் லீக்

Vivo X Fold 3 Pro அறிமுகத்திற்க்கு முன்னே Flipkart யில் டீசர் லீக்
HIGHLIGHTS

Vivo X Fold 3 Pro இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்,

Vivo X Fold 3 Pro ஒரு சக்திவாய்ந்த போல்டபில் ஸ்மார்ட்போனாக கருதப்படுகிறது

இந்த போல்டபில் ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்டின் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Vivo X Fold 3 Pro இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும், விவோ இந்த ஸ்மார்ட்போனை ஜூன் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. Vivo X Fold 3 Pro ஒரு சக்திவாய்ந்த போல்டபில் ஸ்மார்ட்போனாக கருதப்படுகிறது. இந்த போனை இந்தியாவில் வெளியிடுவதற்காக நிறுவனம் இப்போது பிளிப்கார்ட்டில் மைக்ரோசைட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது., இருப்பினும், நிறுவனம் அதன் சிறப்பம்சங்கள் இன்னும் வெளியிடவில்லை. இந்த போல்டபில் ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்டின் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Vivo X Fold 3 Pro இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டீசரையும் வெளியிட்டுள்ளது. தவிர, இதற்கான மைக்ரோசைட்டும் Flipkartல் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் சிறப்பம்சங்கள் சீன வகைகளிலிருந்தும் மதிப்பிடப்படலாம்.

Vivo X Fold 3 Pro எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சம்

Vivo X Fold 3 Pro யின் இந்திய வகைகளில் 8.03-இன்ச் மெயின் டிஸ்ப்ளே கொடுக்கப்படலாம். அதேசமயம் வெளிப்புற டிஸ்ப்ளே 6.53 இன்சாக இருக்கும். போனின் ப்ரைம் டிஸ்ப்ளே 2,748 x 1,172 பிக்சல்கள் ரேசளுசன் கொண்டதாக இருக்கலாம்

அதேசமயம் வெளிப்புற டிஸ்ப்ளே 2,480 x 2,200 பிக்சல் ரேசளுசன் கிடைக்கும் இரண்டு டிஸ்ப்ளேவில் LTPO தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். இது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்யும் போனின் ப்ரைட்னாஸ் 4,500 நிட்கள் இருக்கும். இதில் அல்ட்ராசோனிக் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கலாம்.

இந்த போனில் Snapdragon 8 Gen 3 சிப்செட் கொடுக்கப்படலாம் இதில் 16GB LPDDR5 ரேம் மற்றும் 1TB UFS 4.0 இணைத்தல் சாத்தியமாகும். சாதனம் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்டை கொண்டிருக்கும்.

இதையும் படிங்க Moto G85 5G கீக் பெஞ்சில் பல தகவல் லீக் பாருங்க

கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த போனில் 50 மெகாபிக்சல் பின்புற ப்ரைமரி கேமரா இருக்கும். 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் இருக்கும். செல்ஃபி வீடியோ காலிற்காக இந்த போனில் 32 மெகாபிக்சல் கேமரா இருக்கும். இது தவிர, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ, வைஃபை 7 மற்றும் NFC சப்போர்ட் ஆகியவை இதில் வழங்கப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo